Murder : ஜோதிடம் பலிக்காத ஆத்திரம்.. கூலிக்கு ஆள் வைத்து ஜோதிடரையே கொலை செய்த பெண் உள்ளிட்ட இருவர் கைது
Jan 19, 2025, 02:53 PM IST

Murder : கணவர் ஜான் ஸ்டீபன் வீட்டில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து விஜயகுமாரி ஆசாரிப்பள்ளம் போலீசில் கொடுத்தார். விஜய குமாரியின் புகாரின் பேரில் அங்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்க அனுப்பி வைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஜோதிடம் பலிக்காததால் கூலிக்கு ஆள் வைத்து வீட்டில் யாரும் இல்லாத போது ஜோதிடரை கொலை செய்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோலில் ஆசாரிப்பள்ளம் அருகே உள்ள கீழப்பெருவிளை இசக்கி அம்மன் கோவில் தெருவையை சேர்ந்தவர் ஜான் ஸ்டீபன். நாட்டு வைத்தியரான பணியாற்றினார். மேலும் இவர் ஜோதிடமும் பார்த்து வந்தார். இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. மேலும் விஜயகுமாரி ஜான் ஸ்டீபனின் மகன் கோவையில் தங்கி படித்து வருகிறார்.
பிணமாக கிடந்த ஜான் ஸ்டீபன்
இதனால் அவர்கள் வீட்டில் விஜயகுமாரி மற்றும் ஜான் ஸ்டீபன் இருவர் மட்டும் தனியாக வசித்து வந்தனர். விஜயகுமாரி வீட்டு வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று விஜயகுமாரி வழக்கம் போல் வீட்டு வேலை செய்து விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது போது கணவர் ஜான் ஸ்டீபன் வீட்டில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து விஜயகுமாரி ஆசாரிப்பள்ளம் போலீசில் கொடுத்தார். விஜய குமாரியின் புகாரின் பேரில் அங்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்க அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பிரேத பரிசோதனை முடிவில் ஜான் ஸ்டீபன் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதை அடுத்து காவல் துறையினர் ஜோதிடர் ஜான் ஸ்டீபன் கொலை குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் இரணியலை அடுத்த கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்த கலையரசி நெல்லை மாவட்டம், கருவேலங்குளத்தை சேர்ந்த நம்பிராஜன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கைது செய்யப்பட்டுள்ள கலையரசி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பது தெரிந்து வந்தது. இந்நிலையில் கலையரசியை அவரது கணவருடன் சேர்த்து வைப்பதற்காக ஜோதிடம் பார்க்க ஜான் ஸ்டீபனிடம் வந்தனர் என்பது தெரிய வந்தது. இதனால் ஜோதிடர் ஜான் ஸ்டீபன் சில பரிகாரங்களை செய்வதாக கூறி பணம் வாங்கியுள்ளார்.
ஜான் ஸ்டீபனுக்கும், கலையரசிக்கும் இடையே தகராறு
ஆனால் ஜோதிடம் பார்த்து பரிகாரங்கள் செய்த பிறகும் பிரச்சனை தீராததால் ஆத்திரமடைந்த கலையரசி ஜான் ஸ்டீபனிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதனால் ஜான் ஸ்டீபனுக்கும், கலையரசிக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கலையரசி நம்பி ராஜனை தொடர்பு கொண்டு ஜான் ஸ்டீபனை கொலை செய்ய பணம் கொடுத்து உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ஜான் ஸ்டீபனை நம்பி ராஜன் கழுத்தை இறுக்கியும் தரையில் தலையை அடித்தும் கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பு ஓடியது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட கலையரசி மற்றும் நம்பிராஜனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோதிடம் பலிக்காததால் கூலிக்கு ஆள் வைத்து ஜோதிடரையே கொலை செய்த சம்பவம் நாகர் கோவில் பெருவிளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.