தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: வேளாண் பட்ஜெட் தாக்கல் முதல் ஹால் டிக்கெட் ரிலீஸ் வரை.. இன்றைய டாப் 10 செய்திகள்!

Top 10 News: வேளாண் பட்ஜெட் தாக்கல் முதல் ஹால் டிக்கெட் ரிலீஸ் வரை.. இன்றைய டாப் 10 செய்திகள்!

Karthikeyan S HT Tamil

Feb 20, 2024, 07:16 AM IST

google News
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுவது முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு வரையிலான இன்றைய டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

  • தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
  • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வைடூரிய நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்குமாறு கர்நாடக அரசுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உள்துறை செயலாளர் நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ள பெங்களூரு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
  • சென்னையில் தொடர்ந்து 640-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்கப்படுகிறது.
  • சண்டீகர் மேயர் தேர்தலில் பதிவான வாக்குகள், வீடியோ பதிவு ஆகியவற்றை பத்திரமாக உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதை ஆய்வு செய்து உண்மையின் அடிப்படையில் தேர்தல் முடிவு உத்தரவை அறிவிக்கக்கூடும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • சிலிகுரி பூங்காவில் சீதா - அக்பர் சிங்கங்கள் தொடர்பான வழக்கு மேற்கு வங்க உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1ஆம் தேதி தொடங்கவுள்ள 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகலில் வெளியிடப்படுகிறது. https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
  • தமிழக நிதியமைச்சரின் பட்ஜெட், அரசின் கனவு என்றும், அந்த கனவை நனவாக்க அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பாடுபடுவதுடன், திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின அறிவுறுத்தியுள்ளார்.
  • உத்தரப்பிரதேச மாநில வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 14 ஆயிரம் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
  • ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ. கோவையில் நடைபெற உள்ள போட்டியில் சௌராஷ்டிரா அணியை எதிர்கொள்ள உள்ளது தமிழ்நாடு.
  • மியான்மரில் பழங்குடியினப் படையினரிடம் சரணடைந்ததற்காக 3 படைப்பிரிவு தளபதிகளுக்கு அந்த நாட்டு ராணுவம் மரண தண்டனை விதித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி