தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vhp Rally Case: விஎச்பி பேரணி மனு: வேறு நீதிபதிக்கு மாற்றிய ஜி.ஆர்.சுவாமிநாதன்!

VHP rally case: விஎச்பி பேரணி மனு: வேறு நீதிபதிக்கு மாற்றிய ஜி.ஆர்.சுவாமிநாதன்!

Dec 22, 2022, 06:35 PM IST

google News
விசுவ இந்து பரிசித் சார்பில் தென் மாவட்டங்களில் பேரணி நடத்த அனுமதி கோரிய வழக்கில், விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றி நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

விசுவ இந்து பரிசித் கட்சி சார்பாக உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், "விசுவ இந்து பரிசித் சார்பில் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தென் தமிழகத்தில் ஜனவரி 1, 2023 முதல் ஜனவரி 17, 2023 வரை 17 நாள்கள் திருச்சி, மதுரை, ராமநாதபுரம் நாகர்கோவில் உட்பட பல ஊர்களில் உள்ள பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி நடத்த அனுமதி கோரப்பட்டது.

ஆனால் இந்த பேரணிக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. எனவே விழிப்புணர்வு பேரணி நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு எனது விசாரணையின் வரம்புக்கு உட்பட்டது அல்ல. எனவே இந்த வழக்கை விசாரணை செய்யக்கூடிய நீதிபதியின் விசாரனைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி