தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Medical Scheme : சிறுநீரக பாதிப்பில் முந்தும் தமிழகம் – சீர்மிகு மருத்துவ திட்டங்களில் உள்ள குளறுபடிகள் என்ன?

Medical Scheme : சிறுநீரக பாதிப்பில் முந்தும் தமிழகம் – சீர்மிகு மருத்துவ திட்டங்களில் உள்ள குளறுபடிகள் என்ன?

Priyadarshini R HT Tamil

Jul 11, 2023, 01:07 PM IST

google News
மேற்கூறியவை அனைத்தும் நடைமுறையில் இருக்கும் சூழலை உருவாக்குவதோடு, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை அனைவருக்கும் இலவசமாக அளிக்க திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேற்கூறியவை அனைத்தும் நடைமுறையில் இருக்கும் சூழலை உருவாக்குவதோடு, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை அனைவருக்கும் இலவசமாக அளிக்க திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேற்கூறியவை அனைத்தும் நடைமுறையில் இருக்கும் சூழலை உருவாக்குவதோடு, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை அனைவருக்கும் இலவசமாக அளிக்க திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் சிறுநீரக பாதிப்புகள் அகில இந்திய அளவை விட கூடுதலாக இருப்பதால், அதை தடுக்க தமிழக அரசு,‘சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத் திட்டம்’ என்பதை தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,213 துணை சுகாதார மையங்கள், 2,286 கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனைத்திலும் ரூ.2 கோடியில் சிறுநீரக பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிந்து (Urine Protein-Dipstick method) உரிய சிகிச்சையளித்து, நாள்பட்ட சிறுநீரக பாதிப்புகளைக் குறைத்து, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையின் தேவையை குறைக்க, சிறுநீரில் ஆரம்ப பாதிப்பை கண்டறிய புரத்தை கண்டறிதல் (Proteinuria) மூலம் அறிந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை மேற்கொள்ள தமிழக அரசு இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

குறிப்பாக கிராமப்புற எழை, எளிய மக்கள் பயனுறும் வகையில் துணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இப்பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பது நல்லது.

இத்திட்டத்தை மேம்படுத்த சில அறிவுரைகள் –

சிறுநீரில் புரதத்தை அளப்பதை விட, சிறுநீரில் குறு அளவில் ஆல்புமின் புரத வெளியீட்டை அளந்தால், (microalbuminuria-சிறுநீரில் 100 மி.லி.க்கு 30-300மி.கி இருப்பது) இன்னமும் கூடுதலாக விரைவில் சிறுநீரக பாதிப்பை கண்டறிய முடியும் என்பதே துறை சார்ந்த நிபுணர்களின் கூற்றாக உள்ளது. புரத்தை அளப்பது 300 மி.கி.க்கு மேல் பாதிப்பு ஏற்படுவது அறிவதை (Proteinuria-இதுவே தமிழக அரசின் திட்டம்) தாமதப்படுத்தலாம். எனவே Microalbuminuria கண்டறிவதே சிறந்த திட்டம். மிக ஆரம்பத்திலேயே பாதிப்பை அறிய முடியும்.

இத்திட்டத்தில் கூட சிறுநீரக பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்க முயற்சிகள் இல்லை. சிறுநீரக பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய மட்டுமே திட்டங்கள் உள்ளதால், நோய் பாதிப்பு ஏற்படுத்துவதைத் தடுக்க பின்வரும் முயற்சிகளும் இணைத்தே மேற்கொள்வது சிறந்தது.

ஆரோக்கியமான உணவு உட்கொள்வதை வலியுறுத்தும் திட்டங்கள் தேவை.

மது, புகைத்தல், பிற போதைப் பொருட்கள் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கைகள் தேவை.

நார்ச்சத்து அதிகம் உள்ள பொருட்களை உட்கொள்ள வலியுறுத்த வேண்டும். (பழங்கள், காய்கறிகள், கீரைகள் அதிகம் உணவில் சேர்க்கப்பட வேண்டும்)

கொழுப்பு, உப்பு குறைக்கப்பட வேண்டும் (3-5 கிராம்/நாள்)

சுவைக்காக (துரித உணவுகள்) உணவுகள் சாப்பிடுவது எப்போதாவது ஒரு நாள் என்றும், தினமும் சுகாதாரமான உணவுகளை உட்கொள்ள வலியுறுத்தவும் வேண்டும்.

சத்தான, சுகாதார உணவுகளுக்கு வரி குறைவாகவும், சுகாதாரமற்ற உணவுகளுக்கு வரி அதிகமாகவும் இருக்க வேண்டும்.

சுகாதாரத்திற்கு உடற்பயிற்சி அவசியம். நடப்பதற்கு நடைபாதைகளும், மிதிவண்டியில் செல்வதற்கு ஊக்கமளிக்கும் திட்டங்களும் தேவை.

விவசாயிகளுக்கு பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்ய சலுகைகள்/உதவிகள் அளிக்கப்பட வேண்டும்.

பொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியங்கள் இருப்பதையும், உணவுப் பொருட்களின் தரமும் உறுதி செய்யப்பட வேண்டும்.

காற்று மாசுபாடு, ஆலைக்கழிவுகளை குறைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

உணவுப்பொருட்களில் பாதுகாப்பற்ற பொருட்கள் (அளவிற்கு அதிகமாக சர்க்கரை, கொழுப்பு) அதிகம் இருந்தால் அது தெளிவாக குறிக்கப்பட வேண்டும் (Labelling)

மேற்கூறியவை அனைத்தும் நடைமுறையில் இருக்கும் சூழலை உருவாக்குவதோடு, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை அனைவருக்கும் இலவசமாக அளிக்க திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மொத்தத்தில் நோய்தடுப்பு நடவடிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து நோய் வராமல் காப்பதே சிறந்த திட்டமாக அமையும்.

மேற்குறியவற்றையும் அரசு கவனத்தில் கொண்டு செயல்பட்டால் சிறப்பாக இருக்கும்.

அரசு துணை சுகாதார மையங்களில் புரத்தை அளக்கும் Dip stick இருப்பதாகக் கூறினாலும், அது இன்னமும் அனைத்து துணை சுகாதார மையங்களை வந்தடையவில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே அப்பரிசோதனை வசதி உள்ளது. துணை சுகாதார மையங்களை அது விரைவில் வந்தடைய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி