தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Avaniyapuram Jallikattu: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழக்கு..உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Avaniyapuram Jallikattu: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழக்கு..உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Karthikeyan S HT Tamil

Jan 12, 2024, 05:07 PM IST

google News
மதுரை, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து கமிட்டி அமைத்து நடத்த கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (ஜன.12) விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை, மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்த எந்த தடையும் இல்லை. போட்டியின்போது தனிநபர்களோ, மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இல்லாதவர்களோ எந்த பிரச்னை, இடையூறு செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டு போட்டியின்போது இடையூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, மதுரையைச் சேர்ந்த முனியசாமி உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், அவனியாபுரத்தில் பல சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 

அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய ஊர்களில் அரசு நடத்தும் ஜல்லிக்கட்டு விழாவில் அனைத்து சமூகத்தை சேர்த்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது. ஆனால் அவனியாபுரத்தில் மாவட்ட நிர்வாகம் மட்டுமே ஜல்லிக்கட்டு விழா நடத்துகிறது. எனவே ஜனவரி 15 ல் நடக்க இருக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அனைத்து சமூகத்தினரின் இணைத்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்குகளில் தற்போது அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி