தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mullaperiyar Dam: முல்லைப் பெரியாறில் புதிய அணை: ஓபிஎஸ் சொன்னது என்ன?

Mullaperiyar Dam: முல்லைப் பெரியாறில் புதிய அணை: ஓபிஎஸ் சொன்னது என்ன?

Karthikeyan S HT Tamil

Jan 15, 2023, 03:58 PM IST

google News
OPS Talk about Mullaperiyar Dam: பொதுவாக இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, ஒரு நதி மேலிருந்து கீழாக செல்கின்ற போது பாசனப் பகுதியாக இருக்கின்ற மாநிலத்தின் இசைவு பெற்றுத்தான் மேல் பகுதியில் இருப்பவர்கள் அணையை கட்ட வேண்டும் - ஓபிஎஸ்

முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குயிக்-ன் 182வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் அளித்த பேட்டி: "கர்னல் ஜான் பென்னிகுயிக்-ன் தியாகத்தை நினைவு கூறும் விதமாக அவருக்கு லோயர் கேம்ப் பகுதியில் மணிமண்டபம் அமைத்தது, தேனியில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்கு அவரது பெயரை சூட்டியது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான்.

மேலும், 5 மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதல் கட்டமாக 142 அடியாக உயர்த்தவும், பேபி அணையை பலப்படுத்திய பின் 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் பெற்றுத் தந்ததும் ஜெயலலிதா தான்.

ஆனால், தீர்ப்பிற்கு பின் பேபி அணையை பலப்படுத்த விடாமல் கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. தற்போதுள்ள திமுக அரசு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனக் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "பொதுவாக இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, ஒரு நதி மேலிருந்து கீழாக செல்கின்ற போது பாசனப் பகுதியாக இருக்கின்ற மாநிலத்தின் இசைவு பெற்றுத்தான் மேல் பகுதியில் இருப்பவர்கள் அணையை கட்ட வேண்டும்.

அந்த அடிப்படையில் தமிழக அரசின் இசைவு பெறாமல் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக மேல் புறத்தில் கேரள அரசால் புதிய அணை கட்ட முடியாது. அதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை. தமிழக அரசின் அனுமதி இல்லாமல் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக கேரள அரசால் புதிய அணை கட்டமுடியாது." என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி