எனக்கு சல்யூட் அடித்த அண்ணாமலைக்கு முன் வரிசை! எனக்கு பின் வரிசையா? பிரித்து மேய்ந்த ஜெகதீஷ் ஷெட்டர்
Apr 19, 2023, 12:26 PM IST
நாங்கள் அமைச்சராக இருந்தபோது ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். இப்போது அவர் தேர்தல் இணைப் பொறுப்பாளராக இருக்கிறார், நாங்கள் அவருக்குக் கீழ் சிறு குழந்தைகளைப் போல அமர்ந்திருக்கிறோம் - ஜெகதீஷ் ஷெட்டர்
வரும் மே 10ஆம் தேதி கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேசியத் தலைமை சீட் ஒதுக்க மறுத்ததால் சீனியர்கள் பலர் பாஜகவில் இருந்து விலகி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஹூப்ளி-தார்வாட் தொகுதியில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெகதீஷ் ஷெட்டர், கர்நாடக மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலையை கடுமையாக சாடி உள்ளார்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழ்நாடு மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 20 முதல் 30 இடங்களைப் பெற்று வெறும் 4 முதல் 5 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளனர்.
என்னைப் போல் 6 அல்லது 7 முறை எம்எல்ஏவாக இருந்தவர்கள் ஏராளம். ஆனால் ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாத ஒருவர் நமது மாநில தேர்தல் பொறுப்பாளராக உள்ளார். சமீபத்தில் நாங்கள் கோர் கமிட்டி கூட்டத்தில் அண்ணாமலை முன் வரிசையில் அமர்ந்திருந்த போது முன்னாள் முதலமைச்சர்களான நானும் சதானந்த கவுடாவும் பின்வரிசை உறுப்பினர்களாக அமர்ந்திருந்தோம்.
நாங்கள் அமைச்சராக இருந்தபோது ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். இப்போது அவர் தேர்தல் இணைப் பொறுப்பாளராக இருக்கிறார், நாங்கள் அவருக்குக் கீழ் சிறு குழந்தைகளைப் போல அமர்ந்திருக்கிறோம். ஏன் இந்த அவமானம்? அது ஏன் தேவைப்பட்டது? இதையெல்லாம் நாங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தாங்கிக் கொண்டிருக்கிறோம் என வேதனையுடன் கூறினார்.
சமூக வலைத்தளங்களில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழை பின் தொடர கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்:-
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil