தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eps Vs Sengottaiyan: அதிமுக மேடைகளில் ஈபிஎஸ் பெயரை சொல்லாதது ஏன்? உடைத்து பேசிய செங்கோட்டையன்!

EPS VS Sengottaiyan: அதிமுக மேடைகளில் ஈபிஎஸ் பெயரை சொல்லாதது ஏன்? உடைத்து பேசிய செங்கோட்டையன்!

Kathiravan V HT Tamil

Updated Feb 14, 2025 12:50 PM IST

google News
நேற்றைய பொதுக்கூட்டத்தில் பேசும் போது அந்தியூரில் தொடர்ந்து வெற்றி பெற்று உள்ளோம். இந்த முறை தோற்க சிலர் துரோகம் செய்து உள்ளதால் தோற்றம் என்றேன். துரோகிகள் என குறிப்பிட்டது அந்தியூருக்கு மட்டுமே பொருந்தும் என்றார்.
நேற்றைய பொதுக்கூட்டத்தில் பேசும் போது அந்தியூரில் தொடர்ந்து வெற்றி பெற்று உள்ளோம். இந்த முறை தோற்க சிலர் துரோகம் செய்து உள்ளதால் தோற்றம் என்றேன். துரோகிகள் என குறிப்பிட்டது அந்தியூருக்கு மட்டுமே பொருந்தும் என்றார்.

நேற்றைய பொதுக்கூட்டத்தில் பேசும் போது அந்தியூரில் தொடர்ந்து வெற்றி பெற்று உள்ளோம். இந்த முறை தோற்க சிலர் துரோகம் செய்து உள்ளதால் தோற்றம் என்றேன். துரோகிகள் என குறிப்பிட்டது அந்தியூருக்கு மட்டுமே பொருந்தும் என்றார்.

அதிமுக பொதுக் கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை சொல்லாதது ஏன் என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்து உள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் மீது அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. 

அத்திக்கடவு அவிநாசி திட்ட பாராட்டு விழா

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்டம் அன்னூரில் விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.சி.கருப்பண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சியை புறக்கணித்தது ஏன்?

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அத்திக்கடவு - அவிநாசி திட்ட விழாவை ஏற்பாடு செய்வதவர்கள் 3 நாட்களுக்கு முன்னர் என்னை சந்தித்தார்கள். எங்களை உருவாக்கிய புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மாவின் திருவுருவப்படங்கள் இல்லை. எங்களிடம் கலந்து இருந்தால் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவேன். டிஜிட்டல் போர்ட் வைத்த பின்னர்தான் எனது கவனத்திற்கு வந்தது. அவருடைய படங்கள் இல்லை என்று சொன்னேன். நான் புறக்கணிக்கவில்லை. அங்கே செல்லவில்லையே தவிர, அத்திக்கடவு - அவிநாசி திட்ட குழுவிடம் நான் இதை சொல்லி உள்ளேன்.” என கூறி இருந்தார்.

என்னை சோதிக்காதீர்கள்

நேற்று முன் தினம் ஈரோட்டில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், “என்னை பொறுத்தவரையில் நேர்மையான பாதையில், தன்னலம் கருதாது பாடுபடக்கூடியவன். எத்தனையோ வாய்ப்புகள் வரும்போது, அதை பற்றி கவலைப்படவில்லை. இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். என்னை சோதிக்காதீர்கள்” என பேசி இருந்தார். நேற்றைய தினம் அந்தியூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசுகையில் துரோகிகளால் அதிமுக தேர்தலில் தோல்வி அடைந்ததாக குற்றம்சாட்டி இருந்தார். 

எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லாதது ஏன்?

இந்த நிலையில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனிடம் ஆர்.பி.உதயகுமாரின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘அவரே என்னை விமர்சிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்’ என கூறினர். 

துரோகிகளால் அதிமுக வீழ்த்தப்பட்டது என அந்தியூர் பொதுக்கூட்டத்தில் பேசியது குறித்த கேள்விக்கு, நேற்றைய பொதுக்கூட்டத்தில் பேசும் போது அந்தியூரில் தொடர்ந்து வெற்றி பெற்று உள்ளோம்.  இந்த முறை தோற்க சிலர் துரோகம் செய்து உள்ளதால் தோற்றம் என்றேன். துரோகிகள் என குறிப்பிட்டது அந்தியூருக்கு மட்டுமே பொருந்தும் என்றார். 

கடந்த 2 நாட்களாக நீங்கள் பேசும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடாதது ஏன் என்ற கேள்விக்கு, கழக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் என்று குறிப்பிட்டு உள்ளேன் என்று விளக்கம் அளித்தார். 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.