Jallikattu: 2024 ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு உற்சாகமாக தொடங்கியது!
Jan 06, 2024, 08:46 AM IST
Jallikattu: இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் சற்று முன் உற்சாகமாக தொடங்கி உள்ளது.
Jallikattu: இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் சற்று முன் உற்சாகமாக தொடங்கியது.
2024 ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று உற்சாகமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் சுமார் 700 காளைகள் பங்கேற்க உள்ளன.
ஜனவரி 15ம் தேதி தைப்பொங்கள் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பம் ஆகி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் விண்ணேற்பு அன்னை ஆலைய புத்தாண்டு விழா, அந்தோணியார் தேவாலய புத்தாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம். அந்த அடிப்படையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் தற்போது தொடங்கியுள்ளது. இதில் 746 காளைகள் பங்கேற்க உள்ளன.
போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு ஆன்லைன் பதிவு நடத்தப்பட்டது. காரைக்குடி, திண்டுக்கல், திருப்பத்தூர், தஞ்சாவூர், தேவகோட்டை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றுள்ளன. மேலும் 297 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். ஒரு சுற்றுக்கு 30 வீரர்கள் என மொத்தம் 10 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற உள்ளது.
தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்ய நாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முதலில் அடைக்கல மாதா கோயில் காளை அவிழ்க்கப்பட்டது. பின்னர் மலை கோயில் முருகன் மாடு அவிழ்க்கப்பட்டது.
மாடுகளை அடக்கும் வீரர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது மாடுகளுக்கும் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. முன்தாக ஆட்சியர் மெர்சி ரம்யா முன்னிலையில் மாடு பிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதி மொழியை ஏற்றனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டில் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை பின்பற்றி காளைகளின் உரிமையாளர்களுடைய சாதி பெயரை கூறமாட்டோம் என விழா கமிட்டியினர் அறிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15-ம் தேதி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. தொடர்ந்து, பாலமேடு, அலங்காநல்லூர் உட்பட தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்