தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Annamalai : தமிழக அமைச்சர்களுக்கு செலட்டிவ் அம்னீஷியா நோய் வந்துடுச்சா.. இந்த தேர்தல் ஒரு வேண்டாத வேலை-அண்ணாமலை காட்டம்

Annamalai : தமிழக அமைச்சர்களுக்கு செலட்டிவ் அம்னீஷியா நோய் வந்துடுச்சா.. இந்த தேர்தல் ஒரு வேண்டாத வேலை-அண்ணாமலை காட்டம்

Jan 19, 2025, 04:23 PM IST

google News
Annamalai : மீண்டும் அந்த வெள்ளை அறிக்கையை கொடுக்க தயாராக இருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டிற்கு ரூ.11 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோவுக்கு மட்டும் ரூ.43 ஆயிரம் கோடி வாங்கி கொடுத்துள்ளோம்.
Annamalai : மீண்டும் அந்த வெள்ளை அறிக்கையை கொடுக்க தயாராக இருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டிற்கு ரூ.11 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோவுக்கு மட்டும் ரூ.43 ஆயிரம் கோடி வாங்கி கொடுத்துள்ளோம்.

Annamalai : மீண்டும் அந்த வெள்ளை அறிக்கையை கொடுக்க தயாராக இருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டிற்கு ரூ.11 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோவுக்கு மட்டும் ரூ.43 ஆயிரம் கோடி வாங்கி கொடுத்துள்ளோம்.

Annamalai : எடப்பாடி பழனிச்சமி தமிழக அரசின் கடன் குறித்து விமர்சித்து இருந்த நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று காலை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசு முறையாக நிதி வழங்கவில்லை பாரபட்சம் காட்டுவதாக தெரிகிறது 

"தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.43 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கியுள்ளதாக கூறிய அவர், 36 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை மீண்டும் கொடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

தமிழக அமைச்சர்களுக்கு செலட்டிவ் அம்னீஷியா நோயா

மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதிப் பங்கீட்டை கொடுக்கவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டி இருந்தார். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதியை கொடுத்துள்ளதாக கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தென் இந்தியாவில் உள்ள 5 மாநிலங்களுக்கும் சேர்த்தே ரூ.27 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது என்று தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள் ஒன்னுமே புரியவில்லை. செலட்டிவ் அம்னீஷியா என்று ஒரு நோய் உள்ளது. அது தமிழக அமைச்சர்களுக்கு வந்துவிட்டதோ என்று பயமாக இருக்கிறது. எந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறோம் என்று நாடாளுமன்றத் தேர்தலின் போது 36 பக்கங்களில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்திருந்தோம். வேண்டுமென்றால் மீண்டும் அந்த வெள்ளை அறிக்கையை கொடுக்க தயாராக இருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டிற்கு ரூ.11 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோவுக்கு மட்டும் ரூ.43 ஆயிரம் கோடி வாங்கி கொடுத்துள்ளோம்.

அதனை மாநில அரசின் திட்டமாக அறிவித்துவிட்ட பின், மத்திய அரசு நிதியே கொடுக்க கூடாது. ஆனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. இவர்களின் காதுகளில் யாரும் பஞ்சு வைத்து அடைத்துள்ளார்களா.. கண்கள் தெரியாதா அவர்களுக்கு.. பிப்.1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

அதிலும் தமிழ்நாட்டிற்கு பெரியளவில் திட்டங்கள், நிதிகள் வரும். திமுக ஆட்சியின் லட்சணத்தை மறைப்பதற்காக, மத்திய அரசை குறை சொல்வதையே முழு நேர வேலையாக வைத்திருக்கிறது என்று தெரிவித்தார். 

ஜனநாயகத்தின் மீது எப்படி மரியாதை வரும்.

இதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த ஒரு தேர்தலால் ஆட்சி மாறப் போகிறதா.. இந்தியாவில் இதுபோல் அதிகளவில் தேர்தல் நடக்காது. 5 ஆண்டுகளில் மக்கள் 4 முறை வாக்களித்தால் ஜனநாயகத்தின் மீது எப்படி மரியாதை வரும். மக்களை பார்த்து எத்தனை முறை வாக்கு கேட்பீர்கள். எத்தனை முறை மக்கள் வாக்கு அளிப்பார்கள். இப்போது தேர்வாகும் சட்டமன்ற உறுப்பினரின் பதவிக்காலம் வெறும் 9 மாதங்கள் தான். இம்முறை வாக்கு சதவிகிதத்தை பாருங்கள்.. அதனால் தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை நடத்தவே கூடாது.

இடைத்தேர்தல் நடத்தலாம்.. இடைத்தேர்தலுக்கு இடைத்தேர்தலா.. நாங்கள் தேர்தலில் போட்டிபோடுவதற்கு தயாராக இருந்தால், இவர்கள் நேர்மையாக நடத்துவார்களா.. ஆட்சியர், கண்காணிப்பாளர்களை மாற்றாமல் இருப்பார்களா.. எங்களால் மக்கள் மீண்டும் பட்டியில் அடைக்கப்படுவதை விரும்பவில்லை. இந்த தேர்தல் ஒரு வேண்டாத வேலையாக பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி