தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ht Unicorn Story: Fintech துறையை கட்டி ஆளும் தமிழர்கள்! Chargebee நிறுவனத்தின் வெற்றி கதை!

HT Unicorn Story: Fintech துறையை கட்டி ஆளும் தமிழர்கள்! Chargebee நிறுவனத்தின் வெற்றி கதை!

Kathiravan V HT Tamil

Jan 16, 2024, 06:00 AM IST

google News
”HT Unicorn Story: கடந்த 2021ஆம் ஆண்டில் இந்தியாவின் 11ஆவது யூனிகார்ன் நிறுவனமாக சார்ஜ்பீ நிறுவனம் உயர்ந்தது”
”HT Unicorn Story: கடந்த 2021ஆம் ஆண்டில் இந்தியாவின் 11ஆவது யூனிகார்ன் நிறுவனமாக சார்ஜ்பீ நிறுவனம் உயர்ந்தது”

”HT Unicorn Story: கடந்த 2021ஆம் ஆண்டில் இந்தியாவின் 11ஆவது யூனிகார்ன் நிறுவனமாக சார்ஜ்பீ நிறுவனம் உயர்ந்தது”

HT Success Story மற்றும் HT Flop Story வரிசையில் புத்தாண்டு முதல் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு என்ற இலக்கை அடைந்த இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்த தொடர் HT Unicorn Story 

யூனிகார்ன்கள்

இந்த ஸ்டார்ட் அப் யுகத்தில் ஒரு வணிகத்தை தொடங்குவது என்பது மிகச்சுலபமானது ஆகிவிட்டாலும், அதனை தொடர்ந்து நடத்துவது என்பது சவால் மிகுந்ததாக மாறிவிட்டது. பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கிய வேகத்தில் காணாமல் போய்விடுகின்றன. ஆனால் பெரும் சவால்களுக்கு பின்னர் ஒரு பில்லியன் டாலர் மதிப்பை எட்டி யூனிகார்னாக மாறும் நிறுவனங்கள் எண்ணிக்கை இந்தியாவில் வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது.

தொடக்கம்

காக்னிசண்ட் மற்றும் சோஹோ நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான கிரிஷ் சுப்ரமணியன், தியாகராஜன் டி.ராஜாராமன் சந்தானம் மற்றும் சரவணன் கேபி ஆகியோரால் 2011ஆம் ஆண்டு சார்ஜ்பீ நிறுவப்பட்டது.

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம்,  வணிகங்களுக்கான சந்தா பில்லிங் மற்றும் வருவாய் செயல்பாடுகளை எளிமையாக்குவதற்கான தீர்வுகளை வழங்கி வருகிறது. 

வணிக நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களின் சந்தாக்களைக் கண்காணிப்பது, கிளையன்ட் தகவலைச் சேகரிப்பது, பில்களை உருவாக்குவது, பணம் செலுத்துவது போன்ற பல்வேறு சிக்கல்களுக்கு தானியங்கி தொழில் நுட்பம் மூலம் தீர்வுகள் அளிக்கப்படுகிறது.  

உலக அளவில் நிதிச் சேவைத் துறையானது வரும் 2026 ஆம் ஆண்டில் 9.6% CAGR இல் $37,34.95 பில்லியன் டாலர்களை தொடும் என புள்ளிவிவரங்கள் கூறும் நிலையில் நிதிசார்ந்த தீர்வுகளை அளிக்கும் நிறுவனங்களுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 

சார்ஜ்பீ நிறுவனம் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் நாணயங்களை ஏற்றுக் கொண்டு அதற்கான தீர்வுகளை வழங்கி வருகிறது. 227 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 6500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை சார்ஜ்பீ நிறுவனம் கொண்டுள்ளது. 

கடந்த 2021ஆம் ஆண்டில் இந்தியாவின் 11ஆவது யூனிகார்ன் நிறுவனமாக சார்ஜ்பீ நிறுவனம் உயர்ந்தது. பி2பி வணிக மாதிரியில் சாஸ் வகை தொழில்நுட்பம் மூலம் இயங்கி வரும் சார்ஜ்பீ நிறுவனமானது போட்டி மிகுந்த ஃபின்டெக் வணிகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாளராக மாறி உள்ளது. 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி