Mylaswamy Annadurai: நாசாவை வியக்க வைத்த இஸ்ரோ விஞ்ஞானி! நிலவு மனிதன் மயில்சாமி அண்ணாதுரை பிறந்த தினம் இன்று!
Jul 02, 2024, 06:00 AM IST
Mylaswamy Annadurai: மயில்சாமி அண்ணாதுரையின் முயற்சிகள், நிலவில் கொடி பதித்த, 4ஆவது நாடாக இந்தியா உருவெடுக்க காரணமாக அமைந்தது .
இந்தியாவின் ’நிலவு மனிதன்’ என்று அழைக்கப்படும் மயில்சாமி அண்ணாதுரையின், விண்வெளி ஆய்வுக்கான பங்களிப்பு, சந்திரயான் என்ற இந்தியாவின் விண்வெளி கனவை நனவாக்கியதில் முக்கியத்துவம் வாய்ந்தது.
எளிமையான தொடக்கம்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமமான கோதாவாடியில் ஜூலை 2, 1958 பிறந்த மயில்சாமி அண்ணாதுரையின் வாழ்கை மிக எளிமையானதாக இருந்தாலும், அவரது கனவு ‘எடுத்து என்ன?’ என்ற கேள்விகளால் நிறைந்து இருந்தது.
அறிவியல் மீது அவர் கொண்ட பேரார்வம் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை பொறியியல் படிக்க வழி வகை செய்தது.
இஸ்ரோவில் பணி
1982ஆம் ஆண்டு பிஎஸ்ஜி கல்லூரியில் முதுகலை பொறியியல் படிப்பை முடித்த மயில்சாமி அண்ணாதுரை, அதே ஆண்டில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் சேர்ந்தார்.
மென்பொருள் செயற்கைக்கோள் சிமுலேட்டரை உருவாக்குவதற்கான குழுத் தலைவராக அவரது பணி தொடர்ந்த நிலையில், இன்சாட் பணிகளில் முக்கிய பங்களிப்புகளை வழங்கினார். இஸ்ரோவில் அவர் அளித்த அர்ப்பணிப்பு, தொழில்நுட்ப புத்திசாலித்தனம் மற்றும் தலைமைத்துவ குணங்கள் அவரை நிறுவனத்திற்கு ஒரு மதிப்புமிக்க நபராக மாற்றியது.
சந்திரயான்-1: இந்தியாவின் முதல் சந்திரப் பயணம்
2004ஆம் ஆண்டு நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக தொடங்கப்பட்ட சந்திரயான் - 1 திட்டத்தின் இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டார். அக்டோபர் 22, 2008 அன்று வெற்றிகரமாக நிலவுக்கு ஏவப்பட்ட சந்திரயான்-1 வெற்றியின் மூலம் அவரது வாழ்கையில் உச்சம் தொட்டார். சந்திரயான் - 1 விண்ணியில் ஏவப்பட்டது, இந்தியா விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது.
இதன் மூலம் சந்திரனின், மேற்பரப்பை ஆராய்வது மற்றும் அதன் கனிம கலவை பற்றிய தரவுகளை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டது.
மயில்சாமி அண்ணாதுரையின் தலைமையில் சந்திரயான்-1 திட்டம் அமோக வெற்றி பெற்றது. இது சந்திர மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகளின் கண்டுபிடிப்பை உலகுக்கு வெளிக்கொணர்ந்தது.
இந்தியாவின் இந்த ஆய்வு, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவையே வியக்க வைத்தது. இது சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றது உடன், விண்வெளி ஆய்வில் இந்தியாவை ஒரு வலிமையான வீரராக உலகிற்கு காட்டியது.
மேலும், நிலவின் மேற்பரப்பின் விரிவான 3D வரைபடங்களை உருவாக்கி, நிலப்பரப்பு மேப்பிங் கேமரா (TMC) உயர் தெளிவுத்திறன் படங்களை வழங்கியது. ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜர் (HySI) மற்றும் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (C1XS) போன்ற கருவிகள் சந்திரனின் கனிம கலவையைப் புரிந்து கொள்ள உதவியது.
விண்கலத்தில் இருந்து வெளியிடப்பட்ட மூன் இம்பாக்ட் ப்ரோப் (எம்ஐபி), தென் துருவத்திற்கு அருகிலுள்ள சந்திர மேற்பரப்பில் வெற்றிகரமாக தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த ஆய்வு இந்திய மூவர்ணக் கொடியையும் ஏந்திச் சென்றது, நிலவில் கொடியை ஏற்றிய நான்காவது நாடாக இந்தியா மாற காரணமாக அமைந்தது.
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
விண்வெளி அறிவியலில் மயில்சாமி அண்ணாதுரையின் பங்களிப்புகள் பரவலாக அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றன. இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது கடந்த 2016ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அவரது ஆய்வு பணி தேசத்திற்கு பெருமை சேர்த்தது மட்டுமின்றி எண்ணற்ற இளம் மனங்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சார்ந்து இயங்க தூண்டுவதாக அமைந்து உள்ளது. அவரது தொழில்நுட்ப சாதனைகளுக்கு அப்பால், அண்ணாதுரை தனது பணிவு, எளிமை மற்றும் அடுத்த தலைமுறை விஞ்ஞானிகளை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் அறியப்படுகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்