தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eps : மருது சகோதரர்களின் சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை!

EPS : மருது சகோதரர்களின் சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை!

Divya Sekar HT Tamil

Oct 30, 2023, 11:38 AM IST

google News
Maruthu Pandyars : மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Maruthu Pandyars : மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Maruthu Pandyars : மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சிவகங்கை பகுதியை ஆண்ட வேலுநாச்சியார் அரசியின் படை தளபதியாக இருந்து, சிவகங்கை மண்ணை ஆண்டவர்கள் மருது சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட மருது பாண்டியர்கள். இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னோடிகளான மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்திய வீரர்கள். ஆங்கிலேயர்களை எதிர்க்க தேசிய அளவில் அணி உருவாக்கியபோது இவர்களை அழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆங்கிலேயர்கள் ஆளாகினர்.

ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் கோபத்திற்கு ஆளானார்கள்.

இவர்களது களம் சிவகங்கைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது.மருது சகோதரர்களின் 222 வது நினைவு தினம் கடந்த 27 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.

இந்நிலையில் மதுரை தெப்பக்குளம் மருது சகோதரர்கள் சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின் போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி