தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eps: ’கொடநாடு கொலை சம்பவம்! நீதிமன்றம் வர மறுத்த ஈபிஎஸ்! ஓகே சொன்ன நீதிபதி! நடந்தது என்ன?’

EPS: ’கொடநாடு கொலை சம்பவம்! நீதிமன்றம் வர மறுத்த ஈபிஎஸ்! ஓகே சொன்ன நீதிபதி! நடந்தது என்ன?’

Kathiravan V HT Tamil

Nov 07, 2023, 01:51 PM IST

google News
”சாட்சிப்பதிவை தள்ளி வைக்க கோரி 21முறை அவகாசம் கேட்ட நிலையில் தற்போது நீதிமன்றத்திற்கு வர மறுப்பது ஏற்க முடியாது என மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.”
”சாட்சிப்பதிவை தள்ளி வைக்க கோரி 21முறை அவகாசம் கேட்ட நிலையில் தற்போது நீதிமன்றத்திற்கு வர மறுப்பது ஏற்க முடியாது என மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.”

”சாட்சிப்பதிவை தள்ளி வைக்க கோரி 21முறை அவகாசம் கேட்ட நிலையில் தற்போது நீதிமன்றத்திற்கு வர மறுப்பது ஏற்க முடியாது என மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.”

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தன்னை இணைத்து பேசியதற்காக பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேல் மற்றும் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்டோருக்கு எதிராக கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய முதமைச்சரும் தற்போதய அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்தார்.

இதில் சாட்சிகளை பதிவு செய்ய வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பி வைத்து இருந்தது.

இந்த நிலையில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த புதிய மனு ஒன்றில்,

தற்போது தாம் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளதால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்போது பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளால் வழக்கறிஞர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும் என்றும் இதனால் சென்னையில் உள்ள தமது அதிகாரப்பூர்வ இல்லத்திலேயே தமது தரப்பு சாட்சியகளை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் ஏற்கெனவே

சாட்சிப்பதிவை தள்ளி வைக்க கோரி 21முறை அவகாசம் கேட்ட நிலையில் தற்போது நீதிமன்றத்திற்கு வர மறுப்பது ஏற்க முடியாது என மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.

இதனை அடுத்து எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று வழக்கறிஞர் ஆணையராக வழக்கறிஞர் எஸ்.கார்த்திககி பாலன் என்பவரை நியமித்ததுடன் ஒரு மாதத்திற்குள் சாட்சிகளை பதிவு செய்து வரும் டிசம்பர் 15ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி