தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Jagathrakshakan : வருமானவரித்துறை + அமலாக்கத்துறை.. பெரும் சிக்கலில் ஜெகத்ரட்சகன்.. அடுத்து என்ன?

Jagathrakshakan : வருமானவரித்துறை + அமலாக்கத்துறை.. பெரும் சிக்கலில் ஜெகத்ரட்சகன்.. அடுத்து என்ன?

Divya Sekar HT Tamil

Oct 07, 2023, 06:36 PM IST

google News
ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்து சென்றுள்ளனர்.
ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்து சென்றுள்ளனர்.

ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்து சென்றுள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பிமானஜெகத்ரட்சனுக்கு சொந்தமான 50 கும் மேற்பட்ட இடங்களில் மூன்றாவது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகங்கள், மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள், சாராய ஆலைகள், கல்வி நிறுவனங்கள் என 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெறும் நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்து சென்றுள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜெகத்ரட்சகன் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர்.

இந்நிலையில் இன்று மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜெகத்ரட்சகன் வீட்டுக்கு வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையின் போது கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் ஜெகத்ரட்சகனிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அண்ணா நகர் 5ஆவது பிரதான சாலை, Hபிளாக், எண்: 71ல் ஜெகத்ரட்சகனின் உறவினரான பாலசுப்பிரமணியம் ஜெயா மற்றும் குப்புசாமி ஆகியோர்கள் இணைந்து நடத்தி வரும் பரணி பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தில் அலுவலகத்திலும் பாலசுப்பிரமணியம் என்பவரது வீட்டிலும் நடந்து வந்த வருமானவரித்துறை சோதனை நிறைவடைந்தது. சோதனை முடிவில் பல முக்கிய ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி