தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dmk: ’இது ஒரு ஆன்மீக ஆட்சி என்பதில் பெருமை கொள்கிறோம்!’ உதயநிதி முன் அதிர பேசிய சேகர்பாபு!

DMK: ’இது ஒரு ஆன்மீக ஆட்சி என்பதில் பெருமை கொள்கிறோம்!’ உதயநிதி முன் அதிர பேசிய சேகர்பாபு!

Kathiravan V HT Tamil

Published Feb 14, 2025 12:33 PM IST

google News
இந்த ஆட்சியை வீழ்த்துவதற்கு பல்வேறு வகையில் வியூகங்கள் திரைமறைவிலும், வெளி உலகிலும் நடந்து கொண்டிருக்கின்றது. மத்தியிலே ஆளுகின்ற ஒன்றிய அரசிற்கு பி டீம்களாக பல்வேறு முனையில் இருந்து பல்வேறு அரசியல் கணக்குகளை குருட்டுமதியோடு திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 30 இணைகளுக்கு திருமண விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு:-

கழக ஆட்சியில் இருவர்ணக்கொடி தமிழ்நாட்டில் பறக்கும் போது மகளிர் வாழ்வாதாரம் உயர்கிறது. கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் இந்த திட்டம் மூடு விழா கண்டது. முதலமைச்சர் பதவியேற்ற பின்னர்தான் 2022-23ஆம் ஆண்டில் முதற்கட்டமாக 500 இணைகளுக்கு கட்டணமில்லா திருமணம் நடத்த உத்தரவிட்டார். இதுவரை 1800 தம்பதிகளுக்கு அறநிலையத்துறை சார்பில் திருமணம் நடத்தப்பட்டு உள்ளது. 

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் திருக்கோயில்களில் தூப தூப ஆராதனை எங்கெங்கும் மணியோசை எங்கெங்கும் தேவாரம் திருவோசை, மகிழ்ச்சியோடு இறையன்பர்கள் இருக்கின்றார்கள். இது ஒரு ஆன்மீக ஆட்சி என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்த ஆட்சியை வீழ்த்துவதற்கு பல்வேறு வகையில் வியூகங்கள் திரைமறைவிலும், வெளி உலகிலும் நடந்து கொண்டிருக்கின்றது. மத்தியிலே ஆளுகின்ற ஒன்றிய அரசிற்கு பி டீம்களாக பல்வேறு முனையில் இருந்து பல்வேறு அரசியல் கணக்குகளை குருட்டுமதியோடு திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒருபுறம் எங்கு திரும்பினாலும் அப்பா! அப்பா! அப்பா! என்ற குரல் எங்கள் ஆருயிர் தளபதியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. மறுபுறம் எங்கு திரும்பினாலும் அண்ணா! அண்ணா! அண்ணா! என்ற குரல் துணை முதலமைச்சரை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கின்றது. இந்த இரண்டு கூட்டணிகளும் ஒருங்கிணைகின்ற பொழுது 2026 ஆம் ஆண்டு மாண்புமிகு தமிழக முதல்வர் சொல்லியது போல் 200 தொகுதிகளை திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றும்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.