தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Diwali Atrocities: ‘ஏண்டா அங்க வச்சா புஸ்வானம் கொளுத்துவீங்க! தீஞ்சிடாது!’ இளசுகளில் ரில்ஸ் அட்ராசிட்டி!

Diwali Atrocities: ‘ஏண்டா அங்க வச்சா புஸ்வானம் கொளுத்துவீங்க! தீஞ்சிடாது!’ இளசுகளில் ரில்ஸ் அட்ராசிட்டி!

Kathiravan V HT Tamil

Nov 13, 2023, 10:13 AM IST

google News
”ஆபத்தான இடங்களில் பட்டாசுகளை வைத்து கொளுத்தும் இளசுகளில் வீடியோ சமூகவலைத்தளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது”
”ஆபத்தான இடங்களில் பட்டாசுகளை வைத்து கொளுத்தும் இளசுகளில் வீடியோ சமூகவலைத்தளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது”

”ஆபத்தான இடங்களில் பட்டாசுகளை வைத்து கொளுத்தும் இளசுகளில் வீடியோ சமூகவலைத்தளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது”

தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று அதிகாலையிலேயே எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடைகளை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கோலாகலமாக மக்கள் கொண்டாடினர். உச்சநீதிமன்ற உத்தரவின்படி நாடு முழுவதும் பட்டாசுகளை வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் விதித்துள்ளன.

குறிப்பாக பட்டாசு வெடிப்பதற்கான நேரக்கட்டுப்பாடு இதில் முக்கியமானதாக உள்ளது. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகை காற்று மாசுக்கு காரணமாக அமைவதால் தமிழ்நாட்டில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. மாநில வாரியாக பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருந்தது.

தீபாவளி பண்டிகை நடந்து முடிந்த நிலையில் வித்தியாசமான சேட்டைகள் செய்து பட்டாசு வெடித்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றன.

பேண்ட் ஜிப்பிற்குள் புஸ்வானத்தை வைத்து கொளுத்தி தீபாவளி கொண்டாடும் இளைஞர் ஒருவரின் வீடியோ சமூகவலைத்தளத்தில் பேசுப்பொருள் ஆகி உள்ளது. அவரது செயலுக்கு கண்டனம் தெரிவித்து பலரும் அந்த வீடியோவின் கீழ் கமாண்ட் செய்து வருகின்றனர்.

பைக் ரேஸ் செய்து அட்ராசிட்டி செய்து கொண்டிருந்த இளைஞர்கள் தங்களது பைக்குகளில் அவுட் ரக பட்டாசுகளை கட்டி வீலிங் செய்து வானவேடிக்கை நடத்தும் வீடியொ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வீலிங் செய்யும் போது சற்று தவறும்பட்சத்தில் மேலே வெடிக்கும் வெடியானது சாலையில் பொதுமக்களை நோக்கி காயப்படுத்தினால் நிலைமை என்ன என்ற கேள்வியை வைத்து நெட்டிசன்கள் இத்தகைய கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி