தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Divya Sathyaraj : திமுக-வில் இணைந்தார் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா.. நான் திமுகவில் இணைய இதுதான் காரணம் என்றார்!

Divya Sathyaraj : திமுக-வில் இணைந்தார் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா.. நான் திமுகவில் இணைய இதுதான் காரணம் என்றார்!

Jan 19, 2025, 01:42 PM IST

google News
Divya Sathyaraj : தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் முன்னிலையில், இன்று (19.1.2025) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், நடிகர் சத்யராஜின் மகளும் – ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் தி.மு.க.வில் இணைந்தார்.
Divya Sathyaraj : தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் முன்னிலையில், இன்று (19.1.2025) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், நடிகர் சத்யராஜின் மகளும் – ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் தி.மு.க.வில் இணைந்தார்.

Divya Sathyaraj : தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் முன்னிலையில், இன்று (19.1.2025) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், நடிகர் சத்யராஜின் மகளும் – ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் தி.மு.க.வில் இணைந்தார்.

Divya Sathyaraj : தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் முன்னிலையில், இன்று (19.1.2025) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், நடிகர் சத்யராஜ் மகளும் – ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் தி.மு.க.வில் இணைந்தார்.

அப்போது, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பணி செய்ய வேண்டும் என்பது என்னுடைய ரொம்ப நாள் கனவு.  சிறு வயதில் இருந்தே திமுகாவின் கொள்கைகளில் ஈர்ப்பு உண்டு. திமுகவில் இணைந்ததற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது நான் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். திமுக ஆரோக்கியத்திற்கு மரியாதை கொடுக்கும் ஒரு கட்சி. அதற்கு ஒரு உதாரணம் தலைவரின் காலை உணவு திட்டம். திமுக பெண்களுக்கு மரியாதை தரும் ஒரு கட்சி அதற்கு உதாரணம் தலைவரின் புதுமைப்பெண் திட்டம். இது எல்லாத்தையும் விட எல்லா மதங்களுக்கும் மரியாதை தரும் ஒரே கட்சி திமுக மட்டும் தான் என்றார்.

எப்போதும் ஆதரவாக இருப்பார்

என் அப்பா எனக்கு எப்போதுமே ஆதரவாக இருப்பார். என் உயிர்த்தோழர் எனக்கு எப்போதுமே பக்க பலமாக இருப்பார் என்றார்.

சில ஆண்டுகளுக்கு முன் மகிழ்மதி இயக்கம் என்ற ஒற்றைத் தொடங்கினேன். அந்த அமைப்பு மூலமாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்து உணவுகள் வழங்கினோம். அதேபோல மக்கள் பணிகளை தொடர்வேன். மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு என் தந்தை சத்யராஜ் ஒரு உதாரணம் அவரிடம் இருந்துதான் அனைத்தையும் கற்றுக் கொண்டேன்.

நானும் ஒரு பெரியாரிஸ்ட்தான்

நானும் ஒரு பெரியாரிஸ்ட்தான்.. பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவள். தற்போதைய ஆட்சியில் திமுக கொண்டு வந்துள்ள திட்டங்கள் அனைத்தும் சிறந்தது. கொரோனா காலத்தில் பேரணி செல்லலாம், மாடியில் இருந்து கைதட்டலாம், விளக்கேற்றலாம் என்று மற்றவர்கள் கூறிய போது அப்போது பொறுப்பேற்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறப்பாக சூழலை கையாண்டார்.

திமுகவில் தலைவர் எந்த பொறுப்பு கொடுக்கிறாரோ அந்த பொறுப்பில் கடுமையாக உழைப்பேன் என்றார்.

முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் திவ்யா சத்ய ராஜ் அரசியல் வருகை குறித்த செய்திகள் வெளியான நிலையில் அதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், "வணக்கம்‌. எனக்கு அரசியலில்‌ ஆர்வம்‌ உண்டு என்று சில பத்திரிக்கை நண்பர்களிடம்‌ சொல்லியிருந்தேன்‌. அதற்குப்‌ பிறகு எல்லோரும்‌ என்னைக்‌ கேட்கும்‌ கேள்விகள்‌ ‘நீங்கள்‌ எம்‌.பி ஆவதற்காக அரசியலுக்கு வருகிறீர்களா? ராஜ்யசபா எம்‌.பி ஆகனும்கற ஆசை இருக்கா? மந்திரி பதவி மேல்‌ ஆர்வம்‌ உள்ளதா? சத்யராஜ்‌ உங்களுக்குப்‌ பிரச்சாரம்‌ செய்வாரா?’ இப்படிப்‌ பல கேள்விகள்‌.

நான்‌ பதவிக்காகவோ, தேர்தலில்‌ வெல்வதற்காகவோ அரசியலுக்கு வரவேண்டும்‌ என்று நினைக்கவில்லை. மக்களுக்காக வேலை செய்வதற்காகத்‌ தான்‌ அரசியலுக்கு வரவேண்டும்‌ என்று நினைக்கிறேன்‌. நான்‌ களப்பணிகள்‌ செய்ய ஆரம்பித்து சில வருடங்கள்‌ ஆகிறது. 'மகிழ்மதி இயக்கம்‌' என்ற அமைப்பை மூன்று வருடங்களுக்கு முன்‌ ஆரம்பித்தேன்‌. அந்த அமைப்பின்‌ மூலம்‌ தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்குக்‌ கீழ்‌ இருக்கும்‌ மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படுகிறது. நான்‌ தனிக்கட்சி ஆரம்பிக்கப்‌ போவதில்லை.

வரும்‌ தேர்தலில்‌ போட்டியிட எனக்கு ஒரு கட்சியிலிருந்து அழைப்பு வந்தது உண்மைதான்‌. ஆனால்‌, எந்த ஒரு மதத்தைப்‌ போற்றும்‌ கட்சியுடனும் இணைய எனக்கு விருப்பம்‌ இல்லை. எந்தக்‌ கட்‌சியுடன்‌ இணையப்‌ போகிறேன்‌ என்பதை தேர்தல்‌ முடிந்தவுடன்‌ அறிவிப்பேன்‌. சத்யராஜ்‌ அவர்களின்‌ மகளாகவும்‌, ஒரு தமிழ்‌ மகளாகவும்‌, தமிழகத்தின் நலன்‌ காக்க உழைப்பேன்‌” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அவர் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்துள்ளார்.

 

 

 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி