தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கழக முன்னோடிகளில் முக்கியமானவர் அண்ணன் சாத்தையா.. சிவகங்கையில் ஆய்வு பணியின் போது உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

கழக முன்னோடிகளில் முக்கியமானவர் அண்ணன் சாத்தையா.. சிவகங்கையில் ஆய்வு பணியின் போது உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

Published Jun 17, 2025 05:30 PM IST

google News
சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு பணிகளை செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கழகத்தின் மூத்த நிர்வாகியும், முன்னோடியுமான சாத்தையாவை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு பணிகளை செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கழகத்தின் மூத்த நிர்வாகியும், முன்னோடியுமான சாத்தையாவை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு பணிகளை செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கழகத்தின் மூத்த நிர்வாகியும், முன்னோடியுமான சாத்தையாவை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம் செய்து நலத்திட்ட உதவிகளை வழங்குகினார். அத்துடன் தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களையும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது திமுகவின் மூத்த உறுப்பினரும், நிர்வாகியுமான சாத்தையா என்பவரை நேரில் சென்று சந்தித்ததார் உதயநிதி ஸ்டாலின். இந்த சந்திப்பு குறித்து உருக்கமான பதிவை புகைப்படங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

கழக முன்னோடிகளில் முக்கியமானவர்

இதுதொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்க பதிவில்,

சிவகங்கை மாவட்ட கழக முன்னோடிகளில் முக்கியமானவர் அண்ணன் சாத்தையா. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் அன்புக்குரியவராக திகழ்ந்தவர். கழகத்தலைவர் ஸ்டாலின் மீது பற்று கொண்டவர். சிவகங்கை நகர்மன்ற தலைவர், மாவட்டக்கழக அவைத்தலைவர், நகரக்கழகச் செயலாளர், கழக தலைமை செயற்குழு உறுப்பினர் என மக்கள் பணி மற்றும் கழகப்பணி இரண்டிலும் திறம்பட செயல்பட்டவர்.\

இந்தி எதிர்ப்புப் போராட்டம் உட்பட கழகம் அறிவித்த அத்தனை போராட்டங்களிலும் பங்கேற்ற செயல் வீரர். இன்றைக்கு சிவகங்கை வருகை தந்த போது, அண்ணன் சாத்தையா அவர்களின் இல்லத்துக்குச் சென்று அவரிடம் நலம் விசாரித்தோம்.

அண்மையில் மறைந்த அவருடைய துணைவியார் பார்வதி அம்மாளின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினோம். மேலும், சில மாதங்கள் முன்பு திருமணமான அண்ணன் சாத்தையா அவர்களின் பேரன் பிரவீன் குமார் மற்றும் அவரது வாழ்விணையர் ஜனனி (எ) மஞ்சு ஆகியோரை வாழ்த்தினோம்.

அண்ணன் சாத்தையா போன்றோரின் கழகப்பணியை போற்றுவோம். அவருடைய அன்பையும், வாழ்த்தையும் பெற்றதில் மகிழ்கிறோம்!

இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வு

முன்னதாக, மதுரையில் இருந்து காரில் சிவகங்கை வந்த துணை முதல் அமைச்சருக்கு காலையில் திருப்புவனத்தில் மாவட்ட கழகம், எனது தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் காணூரில் ரூ.40 கோடியில் நடைபெற்று வரும் தடுப்பணை திட்டப்பணியை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து சிவகங்கை முதல் நகர்மன்ற தலைவர், கட்சியின் மூத்த முன்னோடி சொ.லெ.சாத்தையாவை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின் சிவகங்கை தாலுகா, சோழபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டப்பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தலைமையில் அரசின் திட்டப்பணிகள், அவற்றின் செயல்பாடுகள், முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

நண்பகலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள திடலில் முடிவடைந்த அரசின் திட்டப்பணிகளை திறந்து வைத்தார். அப்போது புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். விழா மேடையில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

மாலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் அமைப்பாளர்கள் ஆகியோருடனான சந்திப்புக்கு பிறகு மதுரை வந்து விமானம் மூலம் சென்னைக்கு திரும்புகிறார்.

கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.