New Year 2024: பிறந்தது புத்தாண்டு ..2024ஐ உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள் - வீடியோ
Jan 01, 2024, 08:14 AM IST
மக்களின் கொண்டாட்டங்களுக்கு இடையே கோலாகலமாக பிறந்தது 2024 புத்தாண்டு. புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கோயில்களிலும், தேவாலயங்களிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆங்கில புத்தாண்டு தினத்தை உலகம் முழுவதும் நள்ளிரவில் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். அந்த வகையில் தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் களை கட்டுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனா். நள்ளிரவில் மெரினாவில் கூடியிருந்த இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர். ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறும் விதமாக வாழ்த்துக்களை தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். வண்ண வண்ண பலூன்களையும் பறக்கவிட்டனா்.
புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள், தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு செய்தனா். கொடைக்கானலில் நேற்று பகலில் இயற்கை எழிலைக் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள், நள்ளிரவில் கடும் குளிரிலும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள், நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி இருந்தன. 2024-ம் ஆண்டு புத்தாண்டைக் கொண்டாட கேரளா,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் உதகையில் திரண்டு இருந்தனா். இதேபோல், புதுச்சேரி, மதுரை, கோவை, சேலம், திருச்சி, ஊட்டி உள்ளிட்ட இடங்களிலும் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழந்தனா்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை போலீசார் விதித்திருந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை தடுக்கும் வகையில் மெரினா காமராஜா் சாலை, அண்ணாசாலை, வடபழனி, பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டனா்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்