Jayakumar Death Case: நெல்லையை உலுக்கிய ஜெயக்குமார் மரணம்.. அதிரடி காட்டும் போலீஸ்..6 மணிநேர விசாரணையில் நடந்தது என்ன?
May 26, 2024, 11:26 AM IST
Jayakumar Death Case: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக அவரது மனைவி ஜெயந்தி, மகன்கள் கருத்தையா ஜெப்ரின், ஜோ மார்ட்டின், மகள் கேத்தரின் ஆகியோர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தனர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் கடந்த 2 ஆம் தேதி மாயமானார். இது தொடர்பாக ஜெயக்குமாரின் மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கடந்த 4 ஆம் தேதி திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூர் பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் அவரது சடலத்தை போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிபிசிஐடி விசாரணை
ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பான வழக்கை கடந்த 3 நாட்களாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள சிபிசிஐடி. அலுவலகத்திற்கு ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி, மகன்கள் கருத்தையா ஜெப்ரின், ஜோ மார்ட்டின், மகள் கேத்தரின் ஆகியோர் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வருமாறு அழைக்கப்பட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது கேத்தரின் கை குழந்தையுடன் விசாரணைக்கு வந்திருந்தார். பின்னர் அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி நேரடி விசாரணை நடத்தினார்.
சம்பவத்தன்று நடந்தது என்ன?
அதன்பின்னர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ் ஆகியோர் முன்னிலையில் அவர்களது குடும்பத்தினர் சம்பவத் தன்று நடந்த நிகழ்வுகள், ஜெயக்குமாரின் செல்போனுக்கு கடைசியாக தொடர்பு கொண்டு பேசிய விபரம் உள்ளிட்டவற்றை விளக்கமாக எழுதி ஒப்படைத்தனர். இந்த விசாரணையானது சுமார் 6 மணி நேரம் வரை நீடித்தது.அதன்பின்னர் ஜெயக்குமார் குடும்பத்தினர் காரில் ஏறி ஊருக்கு புறப்பட்டனர்.
உறவினர்களிடம் விசாரணை
தொடர்ந்து இன்று ஒரு குழு கரைசுத்து புதூருக்கு சென்று ஜெயக்குமாரின் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் விசாரணை நடத்த உள்ளனர். மற்றொரு குழு ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய பிரமுகர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்புவதற்கு தேவையான ஆவண பணிகளை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
36 நபர்களிடம் விசாரணை
ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டுள்ள நபர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெயக்குமார் மரணம் தொடர்பாக 36 நபர்களிடம் விசாரணை நடத்தியும் வழக்கில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏதும் காணப்படவில்லை.
காவல்துறை விளக்கம்
முன்னதாக, ஜெயக்குமார் மரண வாக்குமூலம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தார். அதில், "கடந்த 30 ஆம் தேதி நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரண வாக்குமூலம் என்ற பெயரில் புகார் மனு ஒன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்ததாகக் கூறி சமூக வலைதளத்தில் பரவி வரும் தகவல் உண்மைக்கு புறம்பானதாகும். இதுகுறித்து கீழ்க்கண்ட மறுப்பு அறிக்கை வெளியிடப்படுகிறது. கடந்த 02.05.2024 அன்று ஜெயக்குமார் தனசிங் மகனான கருத்தையா ஜெஃப்ரின் என்பவர் உவரி காவல் நிலையம் சென்று தனது தந்தையை காணவில்லை என புகார் மனு அளித்ததன் அடிப்படையில் உவரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து உடனடியாக 3 தனிப்படைகள் அமைத்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் விசாரணையை துரிதப்படுத்தினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்