தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Nayinar Nagendran: ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்.. நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன்.. நேரில் ஆஜராக உத்தரவு!

Nayinar Nagendran: ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்.. நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன்.. நேரில் ஆஜராக உத்தரவு!

Karthikeyan S HT Tamil

May 29, 2024, 11:23 AM IST

google News
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி போலீஸார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி போலீஸார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி போலீஸார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் உட்பட 4 பேர் நாளை மறுநாள் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி தரப்பில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பணம் கைப்பற்றப்பட்டது எப்படி?

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த போது, தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் எடுத்து செல்லப்படுவதாக தாம்பரம் காவல் ஆணையரக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நடத்திய சோதனையில் மூன்று பேரிடம் இருந்து 3.90 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

மூன்று பேர் கைது

இதனையடுத்து 3 நபர்களை கைது செய்த போலீசார், அவர்களை தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூன்று நபர்களும் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலில் வேலை செய்வதாகவும், இந்த பணம் தேர்தல் செலவுக்காக அவர் எடுத்து வர சொன்னதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

இதனைத் தொடர்ந்து, நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். ஆனால் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நயினார் நாகேந்திரன் செய்தியார்களிடம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

நயினார் நாகேந்திரன் மீது வழக்கு

இது தொடர்பாக, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நேரில் விசாரிக்க நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீஸார் இரண்டு முறை சம்மன் அனுப்பி இருந்தனர். இதனைத் தொடர்ந்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் பரிந்துரையை ஏற்று, வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். ஆவணங்கள் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர்.

சிபிசிஐடி சம்மன்

இந்த நிலையில் இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நயினார் நாகேந்திரன், பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட 4 பேருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேசவ விநாயகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மீண்டும் சம்மன்

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நாளை மறுநாள் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் உள்ளிட்ட 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி