Bus Strike: ’போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் எதிரொலி! மதுரையில் 90% பஸ் இயக்கம் பாதிப்பு!’
Jan 09, 2024, 07:28 AM IST
”Bus Strike: 900ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் 10 சதவீத பேருந்துகள் கூட இயங்கவில்லை”
அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட நிறைவேற்றப்படாமல் உள்ள கடந்த 8 ஆண்டுகால கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்ககள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.
போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், இன்று நள்ளிரவு 12 மணி முதல் வேலை நிறுத்தம் நடந்து வருகிறது.
அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தொமுச, ஏஐசிடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
தென் மாவட்டத்தில் மிகப்பெரிய பேருந்து நிலையமான மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் என்பது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து தொழிற்சங்கங்களில் வேலை நிறுத்தத்தால் 900ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் 10 சதவீத பேருந்துகள் கூட இயங்கவில்லை.
இரவு 12 மணி முதலே பேருந்து சேவை நிறுத்தப்படும் என்ற அறிவிப்பு காரணமாக பொதுமக்களின் வருகையும் சற்று குறைவாகவே உள்ளது. பிற பணியாளர்களை வைத்து பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.