தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Diwali 2023: தீபாவளி எதிரொலி! சென்னையில் அபாய கட்டத்தை எட்டிய காற்றின் தரக்குறியீடு! எவ்வுளவு தெரியுமா?

Diwali 2023: தீபாவளி எதிரொலி! சென்னையில் அபாய கட்டத்தை எட்டிய காற்றின் தரக்குறியீடு! எவ்வுளவு தெரியுமா?

Kathiravan V HT Tamil

Nov 13, 2023, 07:23 AM IST

google News
“மழை பெய்தால் மட்டுமே காற்றின் தரம் அதிகரிக்கும் எனவும் இயல்பு நிலையை அடைய 2 நாட்கள் வரை ஆகும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்”
“மழை பெய்தால் மட்டுமே காற்றின் தரம் அதிகரிக்கும் எனவும் இயல்பு நிலையை அடைய 2 நாட்கள் வரை ஆகும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்”

“மழை பெய்தால் மட்டுமே காற்றின் தரம் அதிகரிக்கும் எனவும் இயல்பு நிலையை அடைய 2 நாட்கள் வரை ஆகும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்”

நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது

தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று அதிகாலையிலேயே எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடைகளை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கோலாகலமாக மக்கள் கொண்டாடினர். உச்சநீதிமன்ற உத்தரவின்படி நாடு முழுவதும் பட்டாசுகளை வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் விதித்துள்ளன. குறிப்பாக பட்டாசு வெடிப்பதற்கான நேரக்கட்டுப்பாடு இதில் முக்கியமானதாக உள்ளது. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகை காற்று மாசுக்கு காரணமாக அமைவதால் தமிழ்நாட்டில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இதன்படி தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வேண்டுகோள் வைத்து இருந்ததுடன் அரசுவிதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது சட்டநடவடிக்கை பாயும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இருப்பினும் பட்டாசு வெடிக்க போடப்பட்ட உத்தரவுகளை மீறி சென்னை உள்ளிட்ட பல இடங்களில் விடிய விடிய பட்டாசுக்களை வெடித்து தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதன்காரணமாக சென்னையில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. சென்னை நகரை பொறுத்தவரை ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு அபாயகட்டம் என சொல்லப்படும் 250ஆக அதிகரித்துள்ளது.

மணலியில் காற்றின் தரக்குறியீடு 322ஆகவும், ஆலந்தூரில் காற்றின் தரக்குறியீடு 256ஆகவும், வேளச்சேரியில் காற்றின் தரக்குறியீடு 308ஆகவும், ராயபுரம் பகுதியில் காற்றின் தரக்குறியீடு 232ஆகவும், கொடுங்கையூரில் காற்றின் தரக்குறியீடு 126ஆகவும், அரும்பாக்கத்தில் காற்றின் தரக்குறியீடு 256ஆகவும் அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் இருக்க கூடிய முக்கிய இடங்களில் சுவாசிக்க தகுதியற்ற இடங்களாக மாறி உள்ளதாக மத்திய மாநில அரசுகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய அளவில் 150க்கும் மேற்பட்ட நகரங்களில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளது. மழை பெய்தால் மட்டுமே காற்றின் தரம் அதிகரிக்கும் எனவும் இயல்பு நிலையை அடைய 2 நாட்கள் வரை ஆகும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி