தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  C. V. Shanmugam : தேர்தல் ஆணையத்திற்கு குமாஸ்தா வேலை தான்.. மனு அளித்தவர்கள் அதிமுகவினரே அல்ல - சி.வி.சண்முகம்!

C. V. Shanmugam : தேர்தல் ஆணையத்திற்கு குமாஸ்தா வேலை தான்.. மனு அளித்தவர்கள் அதிமுகவினரே அல்ல - சி.வி.சண்முகம்!

Divya Sekar HT Tamil

Published Feb 12, 2025 04:46 PM IST

google News
C. V. Shanmugam : குமாஸ்தா வேலை மட்டுமே தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டும் என அதிமுக எம்.பி., சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார்.
C. V. Shanmugam : குமாஸ்தா வேலை மட்டுமே தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டும் என அதிமுக எம்.பி., சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார்.

C. V. Shanmugam : குமாஸ்தா வேலை மட்டுமே தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டும் என அதிமுக எம்.பி., சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார்.

C. V. Shanmugam : குமாஸ்தா வேலை மட்டுமே தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டும் எனவும், தேர்தல் ஆணையம் இரண்டு தவறுகளை செய்துள்ளது எனவும் அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “இல்லாத அதிகாரத்தை இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. அதிமுக கட்சி விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை. தேர்தல் ஆணையத்துக்கு இரண்டு அதிகாரங்கள் மட்டுமே உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் செயல்பாட்டில் மட்டுமே தேர்தல் ஆணையம் தலையிட முடியும். 29 ஏ பிரிவின் படி ஒரு கட்சியின் சட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் பதிவு செய்ய வேண்டும். 29 ஏ பிரிவு 9ன் படி கட்சி அமைப்பு மாற்றங்களை தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

தேர்தல் ஆணையத்துக்கு வெறும் குமாஸ்தா வேலை மட்டும்தான். மனு அளித்தவர்கள் அதிமுகவினரே அல்ல. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சூரியமூர்த்தி என்பவர் அதிமுகவில் இல்லை. கட்சிக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. வழக்கு தொடர்ந்துள்ள சூரியமூர்த்தி என்பவர் அதிமுக வேட்பாளருக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டவர். இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இருவரும் கையெழுத்திட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி இந்த வழக்கை தொடுத்துள்ளார். தேர்தல் ஆணையம் இதை விசாரிக்கலாமா?

இது தான் எங்கள் முதல் கோரிக்கை

வழக்கு விசாரணையில் தலையிட தங்களுக்கு அதிகாரம் இல்லை என நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையமே ஒத்துக் கொண்டுள்ளது. இன்று நீதிமன்றத்தில் அதிமுக கோரியது, தேர்தல் ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட மனுக்கள், கட்சியில் உறுப்பினரல்லாத, நீக்கப்பட்ட, தூக்கி எறியப்பட்ட துரோகிகள் மனுவின் மீது விசாரணை செய்வதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. முதலில் தனக்கு அதிகாரம் இருக்கிறதா? இல்லையா என தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும். இது தான் எங்கள் முதல் கோரிக்கை.”என தெரிவித்துள்ளார்.

அதிமுக உட்கட்சி விவகாரம்

முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது எனவும், உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்து அனுப்பப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்க கோரி முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வு, தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது. தேர்தல் ஆணையம், சின்ன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் விசாரணையை தொடர அனுமதித்த நீதிபதிகள், மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து திருப்தியடைந்த பிறகே விசாரணையை துவங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். மேலும், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.