தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vadakalai Vs Thenkalai: ’மீண்டும் வெடித்த வடகலை! தென்கலை மோதல்’ காஞ்சிபுரத்தில் பரபரப்பு!

Vadakalai Vs Thenkalai: ’மீண்டும் வெடித்த வடகலை! தென்கலை மோதல்’ காஞ்சிபுரத்தில் பரபரப்பு!

Kathiravan V HT Tamil

Nov 19, 2023, 01:08 PM IST

google News
”தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாக கூறி வடகலை பிரிவினர் எதிர்ப்பு”
”தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாக கூறி வடகலை பிரிவினர் எதிர்ப்பு”

”தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாக கூறி வடகலை பிரிவினர் எதிர்ப்பு”

பிரபந்தம் பாடுவது தொடர்பாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில்

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ஸ்ரீரங்கம், திருப்பதி ஆகிய கோயில்களுக்கு அடுத்ததாக முக்கிய வழிபாட்டு தலமாக விளங்குகிறது. இங்குள்ள ’அனந்த சரஸ்’ எனும் குளத்தில் உள்ள ’அத்தி வரதர்’ 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம். கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அத்தி வரதர் எழுந்தருளும் வைபவம் உலக அளவில் புகழ்பெற்றது. ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் அத்தி வரதரை தரிசனம் செய்தனர்.

மோதலில் முடிந்த வைகாசி பிரம்மோற்சவம்

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற வைகாசி பிரம்மோற்சவவத்தின்போது மூன்றாம் நாள் இரவு நடந்த ஹனுமந்த வாகன உற்சவத்தின்போது வேதபாராயணம் செய்வதில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. பெருமாளுக்கு படைக்கப்பட்ட தோசை, வடையை யாருக்கு தருவது என்பதில் இரு பிரிவினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலாக மாறிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளானது.

மீண்டும் வெடித்த பிரச்னை

இந்த நிலையில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அருகே தேசிக சுவாமிகளுக்கு பிரபந்தம் பாடுவது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கு இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

வேதாந்த தேசிகர் சுவாமிகள் வீதியுலாவின்போது வரதராஜபெருமாள் கோயில் அருகே வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதற்காக குவிந்தனர். அப்போது தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாக கூறி வடகலை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். 

இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் இரு தரப்பினரும் பிரபந்தம் பாட அனுமதித்தால் பிரச்னை இன்றி சுவாமி வீதி உலா நடைபெற்றது.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி