தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Abdul Kalam: 7 மொழிகளில் கலாமின் பொன்மொழி புத்தகங்களை வெளியிட்ட பொறியாளர்!

Abdul Kalam: 7 மொழிகளில் கலாமின் பொன்மொழி புத்தகங்களை வெளியிட்ட பொறியாளர்!

Jul 27, 2023, 08:26 AM IST

google News
தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெழுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், உள்ளிட்ட 7 மொழிகளில் அச்சிடப்பட்ட சுமார் 10 ஆயிரம் புத்தகங்களை முதல் கட்டமாக வழங்க உள்ளார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெழுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், உள்ளிட்ட 7 மொழிகளில் அச்சிடப்பட்ட சுமார் 10 ஆயிரம் புத்தகங்களை முதல் கட்டமாக வழங்க உள்ளார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெழுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், உள்ளிட்ட 7 மொழிகளில் அச்சிடப்பட்ட சுமார் 10 ஆயிரம் புத்தகங்களை முதல் கட்டமாக வழங்க உள்ளார்.

தூக்கத்தில் வருவது அல்ல கனவு உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு என்ற மறைந்த டாக்டர். அப்துல் கலாம் 8 ஆவது நினைவு நாள் இன்று. இந்நிலையில் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த பொறியாளர் அப்துல் கலாம் பொன்மொழிகள் அடங்கிய கையடக்க புத்தகத்தை தயார் செய்து, அதனை பழங்குடி கிராம பள்ளி குழந்தைகளுக்கு வழங்கி உள்ளார்.

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே அப்துல் கலாம் 8 ஆவது ஆண்டு நினைவு தினம் நாளை இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் அப்துல் கலாம் நினைவு நாளில் கோவை - கேரளா எல்லையில் உள்ள பழங்குடி கிராம பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு அப்துல் கலாம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அவரது பொன்மொழிகளை இளம் தலைமுறையினர் பின்பற்ற வேண்டும் என்பதற்காக கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த கட்டுமான பொறியாளர் லூயீஸ் (42) என்பவர் கலாமின் பொன்மொழிகள் அடங்கிய 2 செ.மீ உயரம், 1.5 செ.மீ அகலம் என 64 பக்கங்கள் கொண்ட கையடக்க புத்தகம் தயார் செய்துள்ளார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெழுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், உள்ளிட்ட 7 மொழிகளில் அச்சிடப்பட்ட சுமார் 10 ஆயிரம் புத்தகங்களை முதல் கட்டமாக வழங்க உள்ளார். ஆனைக்கட்டி, மாங்கரை, வயநாடு உள்ளிட்ட பழங்குடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குகிறார்.

விரைவில் 22 மொழிகளில் அவரது பொன்மொழிகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதே என் லட்சியம் என்று பொறியாளர் லூயீஸ் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி