தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eps Vs Mk Stalin: ‘நா நிரூபிக்கவா! உங்க துணிச்சலை பற்றி எங்களுக்கு தெரியுமே!’ ஈபிஎஸ்-ஸ்டாலின் இடையே காரசார விவாதம்

EPS Vs MK Stalin: ‘நா நிரூபிக்கவா! உங்க துணிச்சலை பற்றி எங்களுக்கு தெரியுமே!’ ஈபிஎஸ்-ஸ்டாலின் இடையே காரசார விவாதம்

Kathiravan V HT Tamil

Oct 09, 2023, 02:50 PM IST

google News
“சட்டப்பேரவையில் காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம்”
“சட்டப்பேரவையில் காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம்”

“சட்டப்பேரவையில் காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம்”

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது. கேள்வி நேரம் நிறைவடந்த நிலையில் காவிரி விவகாரத்தில் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.

பின்னர் முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 22 நாள் உரிமையை பெற அதிமுக ஒத்திவைக்கப்பட்டது. ஒருநாள் கூட நாடாளுமன்றத்தில் போராடவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

ரகுபதி, சட்ட அமைச்சர்:- அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பாஜக அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை காப்பாற்றுவதற்காக செய்யப்பட்ட நடவடிக்கையே தவிர தமிழகத்திற்காக இல்லை.

துரைமுருகன், அவை முன்னவர்:- நாடாளுமன்றத்தில் கொடுத்த குரலை நான் மறுக்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர்:- தமிழ்நாட்டில் உள்ள திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் ஏன் நாடாளுமன்றத்தில் காவிரி பிரச்னையை எழுப்பவில்லை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:- காவிரி பிரச்னை பற்றி நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் பேசவில்லை என்பதை எதிர்க்கட்சி தலைவர் சொல்கிறார். நான் பேசியதை நிரூபிக்கவா? இல்லாதது பொல்லாததை எல்லாம் சொல்லக் கூடாது. இதுதான் மரபா? எந்த ஆதாரத்தை வைத்து பேசவில்லை என்று சொல்கிறீர்கள்.

துரைமுருகன், அவை முன்னவர்:- எதிர்க்கட்சி தலைவருக்கு தெரியும் அந்த நேரத்தில் இந்த குழப்பம் உள்ளதால் அவருக்கு மறந்து போய் இருக்கும்.

எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர்: அதிமுக ஆட்சியில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த காலதாமதம் செய்த காரணத்தால் மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு துணிச்சலோடு தொடர்ந்தோம். தற்போதுள்ள அரசுக்கு அந்த துணிச்சல் இல்லை.

மு.க.ஸ்டாலின், முதலமைச்சர்:- காவிரி பிரச்னை துணிச்சலை பற்றி எதிர்க்கட்சித்தலைவர் சொல்ல வேண்டிய அவசியமில்லை; என்ன துணிச்சல் என்பது எங்களுக்கு தெரியும். நிச்சயமாக, உறுதியாக பலமுறை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி உள்ளோம். இதற்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளது. 

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற வேண்டும் என்பதால் நாங்கள் அமைதியாக உட்கார்ந்து உள்ளோம் என்ற காரணத்தால் எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம் என கருதுகிறாரா, உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு, தவறான கருத்துகளை அவையில் பதிவு செய்யும் போது அதனை மறுப்பது என கடமை என கூறினார்.

அடுத்த செய்தி