தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் கொண்டு வந்த 3 தீர்மானங்கள்-முதல்வர் ஸ்டாலின்

அறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் கொண்டு வந்த 3 தீர்மானங்கள்-முதல்வர் ஸ்டாலின்

Manigandan K T HT Tamil

Mar 13, 2023, 02:36 PM IST

google News
Tamilnadu CM Stalin: 'வரலாற்றில் பதிவாகியிருக்கக்கூடிய ஒரு செய்தியை நான் சொல்லாமல் இருந்ததில்லை. அதை இந்த திருமண விழாவிலும் உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.'
Tamilnadu CM Stalin: 'வரலாற்றில் பதிவாகியிருக்கக்கூடிய ஒரு செய்தியை நான் சொல்லாமல் இருந்ததில்லை. அதை இந்த திருமண விழாவிலும் உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.'

Tamilnadu CM Stalin: 'வரலாற்றில் பதிவாகியிருக்கக்கூடிய ஒரு செய்தியை நான் சொல்லாமல் இருந்ததில்லை. அதை இந்த திருமண விழாவிலும் உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.'

அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சரின் சிறப்பு நேர்முக உதவியாளர் சி. மணிவண்ணனின் மகள் லக்ஷயா – கௌதம் ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை:

நம்முடைய முதலமைச்சர் அலுவலகத்தில் சிறப்பு நேர்முக உதவியாளராக மணிவண்ணன் மிகச் சிறப்பாக பணியாற்றி தன்னுடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றுவது என்பது சாதாரண விஷயமல்ல. காரணம், முதலமைச்சர் சொல்லக்கூடிய பணிகள், முதலமைச்சருடைய செயலாளர்களாக இருக்கக்கூடியவர்கள் சொல்லக்கூடிய பணிகள், அதேபோல் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் முதலமைச்சர் அலுவலகத்தைத் தேடி வருகிறபோது,

அவர்களுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லி, அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்று, அதை எந்தெந்த நிலையில் நிறைவேற்றிட வேண்டும் என்பதை

பொறுமையாக எடுத்துச் சொல்லி, வந்தவர்களையும் திருப்திப்படுத்தி அனுப்பி வைக்கக்கூடிய வகையிலும், முதலமைச்சர் அலுவலகத்திற்கு வரக்கூடிய கோரிக்கை மனுக்களைப் பெற்று அந்த மனுக்களுக்குரிய பரிகாரத்தை காணக்கூடிய ஒரு பெரும் பணிகளை ஆற்றக்கூடியவர்களில் ஒருவராக சிறப்பு நேர்முக உதவியாளர் மணிவண்ணன் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

நான் தொடர்ந்து இதுபோன்ற சீர்திருத்த, சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணத்தில் பங்கேற்கிறேன் என்று சொன்னால், அந்த திருமணத்தில் வரலாற்றில் பதிவாகியிருக்கக்கூடிய ஒரு செய்தியை நான் சொல்லாமல் இருந்ததில்லை. அதை இந்த திருமண விழாவிலும் உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

அது என்ன என்று கேட்டால், இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள் 1967-க்கு முன்பு நடைபெறுமென்று சொன்னால், அந்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை பெறாத சூழ்நிலையில்தான் நடைபெற்றிருக்கிறது.

ஆனால் 1967ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அறிஞர் அண்ணா தலைமையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சிக்கு வந்தது.

அறிஞர் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றார். முதலமைச்சராக பொறுப்பேற்ற அறிஞர் அண்ணா அவர்கள், முதன்முதலாக முதலமைச்சராக சட்டமன்றத்திற்குள் நுழைந்து, சட்டமன்றத்தில் மூன்று தீர்மானங்களைக் கொண்டுவந்து உடனடியாக நிறைவேற்றித் தந்தார்.

அந்த மூன்றில் ஒன்றுதான் சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் ஏற்கனவே நடந்திருந்தாலும் இனி நடக்கவிருக்கக்கூடிய திருமணங்களாக இருந்தாலும், அந்த சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றித் தந்தார்.

அடுத்த தீர்மானமாக இருமொழிக் கொள்கையை சட்டமாக்கித் தந்தார். அதற்கடுத்து இன்றைக்கு தமிழ்நாடு, தமிழ்நாடு என்று நாம் கம்பீரமாக சொல்லிக் கொண்டிருக்கிறோமே இந்த தமிழகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.

அதையும் நிறைவேற்றித் தந்தார்கள். எதற்காக இதையெல்லாம் சொல்லுகிறேன் என்று சொன்னால், இன்றைக்கு நடைபெற்றிருக்கக்கூடிய இந்த சீர்திருத்தத் திருமணம் என்பது வெறும் சீர்திருத்தத் திருமணமாக மட்டும் நீங்கள் கருதக்கூடாது, சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கக்கூடிய திருமணமாகவும் நடந்திருக்கிறது.

இன்னும் சொல்ல வேண்டுமென்று சொன்னால், இது ஒரு தமிழ்த் திருமணம். இந்த தமிழைத்தான் தலைவர் கலைஞர் அவர்கள், தமிழுக்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையில் செம்மொழி என்கிற அங்கீகாரத்தையும் தலைவர் கலைஞர் அவர்கள்தான் பெற்றுத் தந்தார்கள். அப்படிப்பட்ட அழகு தமிழ் மொழியில் இந்தத் திருமணம் நடந்தேறி இருக்கிறது.

இப்போதெல்லாம் சீர்திருத்தத் திருமணம் நடக்கிறது என்றால், யாரும் ஆச்சரியப்பட வேண்டிய அவசியமில்லை, முன்பெல்லாம் நடக்கிறபோது ஆச்சரியப்பட்டோம் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி