தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  2023 Political Rewind : ஜனவரி முதல் டிசம்பர் வரை அரசியல் களத்தில் முக்கிய நிகழ்வுகள்!

2023 Political Rewind : ஜனவரி முதல் டிசம்பர் வரை அரசியல் களத்தில் முக்கிய நிகழ்வுகள்!

Dec 31, 2023, 07:20 AM IST

google News
2023 ம் ஆண்டு அரசியல் குறித்த குட்டி ரீவைண்டு
2023 ம் ஆண்டு அரசியல் குறித்த குட்டி ரீவைண்டு

2023 ம் ஆண்டு அரசியல் குறித்த குட்டி ரீவைண்டு

ஜனவரி

•தமிழக சட்டசபையில் கவர்னர் ஆளுநர் ரவி தனது உரையின் உள்ள சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்ததால் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் கூட்டம் முடியும் முன் கவர்னர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. கவர்னர் இருக்கும் போது முதல்வர் பேசியது அநாகரிகம் என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.

•தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் தேநீர் விருந்தை கூட்டணி கட்சிகள் தவிர்த்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

•ஆளுநர் மாளிகையிலேயே குடியரசு தினவிழாவை நடத்தி கொள்ளும் படி கூறி தெலுங்கானா அரசு புறக்கணித்தது குறித்த கேள்விக்கு, "துப்பினால் தொடச்சுக்குவேன்" என்று ஆளுநர் தமிழிசை காட்டமாக தெரிவித்தார்.

பிப்ரவரி

தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதா கிருஷ்ணன் ஜார்கண்ட் கவர்னராகநியமிக்கப்பட்டார். அவர் பிப்ரவரி 18ம் தேதி பதவியேற்றார்.

ஜனவரி 4ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதையடுத்து பிப்ரவரி 27 இடைத்தேர்தல் நடந்தது. இதில் அவரது தந்தை ஈவெரா 66 ஆயிரத்து 233 வாக்குகள் விதித்தியாசத்தில் தேர்வானார்.

மார்ச்

•ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அதிகாரம் தமிழக சட்டசபைக்கு இல்லை என்று கூறி மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார்.

•திரிபுரா முதல்வராக இரண்டாவது முறையாக மாணிக் சாஹா பதவியேற்றார்.

•திருச்சியில் அரசு விழாவில் பங்கேற்க சென்ற அமைச்சர் நேருவுக்கு திமுக ராஜ்யசபா எம்பி சிவாவின் ஆதரவாளர்கள் கறுப்பு கொடி காட்டியதால் இரு தரப்பினருக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது. எம்பி வீட்டிற்குள் நுழைந்து கார் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியது அரசியல் வட்டாரத்தில் பெரும பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று (மார்ச் 23) தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து ராகுல் காந்தி இன்று (மார்ச்.24) எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல்

•சுதந்திர போராட்ட வீரர் வீர் சாவர்க்கரை அவமதித்த ராகுலை நாட்டு மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். ராகுல் எத்தனை பிறவி எடுத்தாலும் சாவர்க்கர் போல் ஆக முடியாது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

•அருணாசல பிரதேச மாநிலத்தின் 11 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டி உள்ளது. இதை இந்தியா முற்றிலும் நிராகரித்தது.

கோடீஸ்வர முதல்வர் பட்டியலில் ஜெகன் மோகன் ரெட்டி முதல் இடத்தை பிடித்தார்.

•ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்து ஏப்ரல் 12 இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழக அரசு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ஏப்ரல் 16 நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆர் எஸ் எஸ் பேரணி 45 இடங்களில் பொதுக்கூட்டம் அமைதியான முறையில் நடந்தது. சென்னை பேரணியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பங்கேற்றார்.

•உத்திர பிரதேசத்தில் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆசை படுத்த அழைத்துச் சென்றபோது பத்திரிக்கையாளர்களை சந்தித்த முன்னாள் எம்பி ஆதிக் அகமது சகோதரருடன் சுட்டுக் கொல்லப்பட்டார் •ஏப்ரல் 29 இல் கருணாநிதி நினைவாக சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க 15 நிபந்தனைகள் விதித்து மத்திய அரசு அனுமதி வழங்கியது

மே

•புதிய நாடாளுமன்ற கட்டிடம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இது 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை என்று பிரதமர் பேசினார். தமிழகத்தில் செய்யப்பட்ட செங்கோல் திருவாடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது.

•கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மே 13ஆம் தேதி முடிவு அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. 224 தொகுதிகளில் 135 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பாஜக 66 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும் வென்றது. இதையடுத்து மே.20ல் கர்நாடக முதல் அமைச்சராக சித்தராமையாவும் துணை முதலமைச்சர் ஆக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றனர்.

•தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் மே.9ல் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். தமிழக அமைச்சரவை மே.11 மாற்றி அமைக்கப்பட்டது. அதில் நிதி துறை அமைச்சராக தங்கம் தென்னரசு மாற்றப்பட்டார். மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராகவும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் மாற்றப்பட்டனர். தொழில்துறை அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்றார்.

ஜூன்

•சட்டசபை தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவிகள் 1500 பேருக்கு ஜூன் 17ஆம் தேதி நடிகர் விஜய் ரொக்கப் பரிசு வழங்கினார். அதில் 500க்கு 500 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் உடன் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அந்த விழாவில் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட வேண்டாம் என விஜய் பேசினார்.

•தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத் துறையினர் ஜூன் 13 திடீர் சோதனை நடத்தினர். சென்னை கரூரில் உள்ள அவரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. நள்ளிரவுக்கு பிறகு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஜூன் 15 செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக இருப்பார் என அறிவிக்கப்பட்டது .முதலில் இதை ஏற்க மறுத்த ஆளுநர் ஆர்.என் ரவி பின்னர் அனுமதித்தார். செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து அவர் வசம் இருந்த மின்சார துறை தங்கம் தென்னரசுவிடமும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துச்சாமிக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட்டது.

ஜூலை

•பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேரள முன்னாள் முதல்வர் அம்மன் சாண்டி ஜூலை 18ஆம் தேதி உயிரிழந்தார்.

•தேனி நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 4 இடைக்கால தடை விதித்தது.

•அண்ணாமலை தலைமையில் என்மண் என் மக்கள் என்ற பெயரில் பாஜகவினர் நடத்திய நடைபயணத்தை ராமேஸ்வரத்தில் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

•பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க பிகார் முதல்வர் நிதிஷ்குமார் துணை முதல்வர் யாதவ் ஆகியோர் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை மேற்கொண்டனர். ஜூன் 23 பீகார் தலைநகர் பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. ஜூலை 17, 18 ல் பெங்களூருவில் நடந்த இரண்டாவது கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 எதிர் கட்சிகள் கலந்து கொண்டனர். இதில் எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் சூட்டப்பட்டது.

ஆகஸ்ட்

•ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேனியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இருவரும் ஒரே மேடையில் பங்கேற்று பேசினர்

•ஆகஸ்ட் 20ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது

•ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது இதை அடுத்து அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்

செப்டம்பர்

•காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார் ஒரு கோடியே 6 லட்சம் பேர் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது.

•தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் செப்டம்பர் இரண்டாம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற பேசினார். சனாதனத்தை ஒழிப்பது குறித்து அவர் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியது. அவரது தலைக்கு அயோத்தி சாமியார் ரூபாய் 10 கோடி பரிசு அறிவித்தார். அவரது உருவப்படத்தை கத்தியால் கிழித்து போராட்டம் நடத்தினார். ஐந்தாம் தேதி திமுகவினர் இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். சனாதன சர்ச்சைக்கு மத்திய அமைச்சர்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி 6ந் தேதி அறிவித்தார்

•ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு செப்டம்பர் ஒன்பதாம் தேதி நள்ளிரவில் சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்ட பின் அவர் மீது மேலும் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவின்படி ஐம்பது நாட்கள் சிறைவாசத்திற்கு பின் அக்டோபர் 31ஆம் தேதி நிபந்தனை ஜாமினில் வெளிய வந்தார்

•பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

அக்டோபர்

•அக்டோபர் 10ஆம் தேதி புதுச்சேரியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

• சென்னையில் கவர்னர் மாளிகை முன்பு அக்டோபர் 25ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக பழைய குற்றவாளி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார். மேலும் கவர்னர் மாளிகை சார்பில் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசப்ப்பட்ட விவகாரத்தில் போலீஸ் நடவடிக்கை அதிருப்தி அளிப்பதாக கவர்னர் மாளிகை மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்ப முடிவு செய்தது. அதே நேரம் கவர்னர் மாளிகை புகாருக்கு போலீஸ் டிஜிபி மறுப்பு தெரிவித்து வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார்.

•ஒரே பாலின திருமணத்திற்கு சட்டத்திற்கு அங்கீகாரம் கிடையாது. அது குறித்து நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது

நவம்பர்

•பஞ்சாப் அரசு தொடர்ந்து வழக்கில் மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற நீதிமன்றம் வரும் நிலையை உருவாக்குவதா? என கவர்னர்களுக்கு நவம்பர் 6ஆம் தேதி உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை உணர வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தது.

•தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கவர்னரின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள அதே சமயம் 10 மசோதாக்களை கவர்னர் ரவி நவம்பர் 16 ல் திருப்பி அனுப்பினார். நவம்பர் 18ல் தமிழக சட்ட சபையில் அந்த பத்து மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு உடனடியாக கவர்னருக்கு

அனுப்பப்பட்டது. இதை அடுத்து மறுநாளே சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்க தமிழக கவர்னர் டெல்லி புறப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு 20 விசாரணைக்கு வந்தது. அப்போது மசோதாகளை திருப்பி அனுப்பியது ஏன் மூன்று ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார் என கவர்னருக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்

•மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான சங்கரய்யா 102 வயதில் நவம்பர் 15ஆம் தேதி இயற்கை எய்தினார். மறுநாள் முழு அரசு மரியாதை உடன் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது.

•தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி உடல்நல குறைவால் நவம்பர் 23 இயற்கை எய்தினார்.

டிசம்பர்

•5 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 4 மாநிலங்களில் டிசம்பர் 3 முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. ராஜஸ்தானின் பஜன்லால் சர்மா, மத்திய பிரதேசத்தில் மோகன் யாதவ், சத்தீஸ்கரின் விஷ்ணு தேவ் சாய் முதல் அமைச்சர்களாக பதவியேற்றனர். தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அக்கட்சியை சேர்ந்த ரேவந்த் ரெட்டி முதல் அமைச்சராக பதவி ஏற்றார். டிசம்பர் நான்காம் தேதி அறிவிக்கப்பட்ட மிசோரம் மாநில தேர்தல் முடிவின் படி எதிர்க்கட்சியான மிசோரம் மக்கள் இயக்கம் 40 தொகுதிகளில் 27 தொகுதிகளை கைப்பற்றியது அக்கட்சியின் நாடு லால்து ஹேமா முதல்வராக பதவி ஏற்றார்.

•விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் டிசம்பர் 14ஆம் தேதி தேமுதிக பொது செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார்.

• சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்று டிசம்பர் 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. மறுநாள் தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது. பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் மூன்று ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் தலா ரூபாய் 50,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் பொன்முடி அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார்.

•நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் டிசம்பர் 28ஆம் தேதி மருத்துவமனையில் இயற்கை எய்தினார். மறுநாள் அவரது உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது

டாபிக்ஸ்

அடுத்த செய்தி