தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Diwali 2023: அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 118 மீது வழக்குப்பதிவு - போலீஸார் அதிரடி!

Diwali 2023: அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 118 மீது வழக்குப்பதிவு - போலீஸார் அதிரடி!

Karthikeyan S HT Tamil

Nov 12, 2023, 02:03 PM IST

google News
விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்களைக் கண்காணிக்க சென்னை காவல்துறை சிறப்பு தனிப்படையை அமைத்து கண்காணித்து வருகிறது.
விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்களைக் கண்காணிக்க சென்னை காவல்துறை சிறப்பு தனிப்படையை அமைத்து கண்காணித்து வருகிறது.

விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்களைக் கண்காணிக்க சென்னை காவல்துறை சிறப்பு தனிப்படையை அமைத்து கண்காணித்து வருகிறது.

சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசுகள் வெடித்ததாக இதுவரை 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையிலும் அதிகாலை முதலே தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கின்றன. தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை சென்னை காவல் துறை அறிவுறுத்தியிருந்தது.

தீபாவளி பண்டிகை தினமான இன்று (நவ.12) உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும் என்று காவல் துறை அறிவுறுத்தியிருந்தது.

மேலும், காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இதன்படி தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வேண்டுகோள் வைத்துள்ளது. மேலும், விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்களைக் கண்காணிக்க சிறப்பு தனிப்படையும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசுகள் வெடித்ததாக இதுவரை 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த தனிப்படை போலீஸார், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக, சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மாசு அளவு 100 ஐ தாண்டி இருந்தது. சென்னை, பெருங்குடி- 178, அரும்பாக்கம் - 159, ராயபுரம் - 115, வேளச்சேரி - 117 என அனைத்து இடங்களிலும் காற்றின் தரக்குறியீடு 100-ஐ தாண்டியது அதேபோல வேலூர், கடலூர், சேலம் ஆகிய நகரங்களிலும் காற்று மாசு மோசமடைந்து உள்ளது. தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்று மாசு அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி