தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tim David: ஆஸி. அணியில் களமிறங்கும் மும்பை அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட்

Tim David: ஆஸி. அணியில் களமிறங்கும் மும்பை அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட்

Sep 02, 2022, 03:01 PM IST

google News
ஐபிஎல் தொடரில் தனது அதிரடியால் கலக்கிய மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன் டிம் டேவிட், மூன்று போட்டிகள் டி20 தொடர் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு விளையாட வரும் ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்துள்ளார். அத்துடன் டி20 உலகக் கோப்பை விளையாடும் ஆஸ்திரேலியா அணியிலும் அவர் இடம்பிடித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்தவர் டிம் டேவிட். தொடரில் மும்பை அணி மிகவும் மோசமாக விளையாடியபோதிலும் டிம் டேவிட் அதிரடியான பேட்டிங் மூலம் எதிரணி பெளலர்களை கதகலங்க வைத்தார்.

அசால்ட்டாக் சிக்ஸர் பறக்க விட்ட இவர், அடுத்த சீசனில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய பேட்ஸ்மேனாக மாறியுள்ளார். சிங்கப்பூரில் பிறந்த டிம் டேவிட் பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார்.

சிங்கப்பூர் அணிக்காக தனது முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிச டி20 உலகக் கோப்பை குவாலிபயர் தொடரில் பங்கேற்றார். 2019 முதல் 2022 தொடக்கம் வரை சிங்கப்பூர் அணியில் விளையாடி வந்தார்.

இதைத்தொடர்ந்து 2022ஆம் ஆண்டில் டிம் டேவிட் ஆஸ்திரேலியா தேசிய அணியில் விளையாடுவதற்கான தகுதி அளித்த நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் அவர் இடம்பிடித்துள்ளார். அதற்கு முன்னதாக இந்தியாவில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது.

இதையடுத்து டி20 உலகக் கோப்பை தொடர், இந்தியாவுக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் விளையாட இருக்கும் ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அணிகளிலும் டிம் டேவிட் இடம்பிடித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 16 தொடங்கி நவம்பர் 13 வரை நடைபெறுகிறது. இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.

டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக செப். 20 முதல் 25 வரை மூன்று போட்டிகள் கொண்டி டி20 தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா விளையாடுகின்றன. இந்தப் போட்டிகள் முறையே மொஹாலி, நாக்பூர், ஹைதராபாத் ஆகிய மைதானங்களில் நடைபெறுகின்றன.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா அணி:

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), பேட் கம்மின்ஸ் (துணை கேப்டன்), மேக்யூ வேட் (விக்கெட் கீப்பர்), டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல், மிச்சல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், கேன் ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், மார்க் ஸ்டோய்னிஸ், ஆஸ்டன் ஆகர், டிம் டேவிட், ஜோஷ் ஹசில்வுட், ஜோஸ் இங்லிஸ்,  ஆடம் ஜாம்பா

இந்தியாவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளுக்கான ஆஸ்திரேலியா அணி:

ஆரோன் பின்ச் (கேப்டன்), பேட் கம்மின்ஸ், வேட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், கேன் ரிச்சர்ட்சன், கேமரூன் கிரீன், ஆஸ்டன் ஆகர், டிம் டேவிட், ஜோஷ் ஹசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ்,மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ ஆடம் ஜம்பா

டாபிக்ஸ்

அடுத்த செய்தி