HBD Wasim Akram : சுல்தான் ஆஃப் ஸ்விங்! வேகப்பந்தில் வித்தைகாட்டும் வாசிம் அக்ரம் பிறந்த தினம்
Jun 03, 2023, 05:50 AM IST
HBD Wasim Akram : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், முன்னாள் கிரிக்கெட் வீரர், வேகப்பந்து வீச்சாளர், கிரிக்கெட் கோச், வர்ணணையாளர் என கிரிக்கெட்டின் அனைத்து பரிமாணங்களிலும் சிறந்து விளங்கிய வாசிம் அக்ரம் பிறந்த தினம் இன்று!
கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டராக இருந்தபோதும், வேகப்பந்து வீச்சாளராக பெரிதும் சாதித்தவர். சுல்தான் ஆஃப் ஸ்விங் என்று அழைக்கப்படும் வாசிம் அக்ரம், 1984 கிரிக்கெட்டில் அறிமுகமானார், அவர் 104 டெஸ்ட், 356 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 460 போட்டிகளில் 926 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
1992 உலகக் கோப்பை வென்றவர் 2003 உலகக் கோப்பைக்குப் பிறகு ODIகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை 2002 இல் முடித்தார்.
ரிவர்ஸ் ஸ்விங் பவுலிங்கில் சிறந்து விளங்கியதான் இவர் சுல்தான் ஆஃப் ஸ்விங் என்று அழைக்கப்படுகிறார்.
வாசிம் அக்ரம் 1966ம் ஆண்டு லாகூரில் ஒரு பஞ்சாப் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். அக்ரமின் தந்தை அம்ரிஸ்டருக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். சுதந்திரத்திற்கு பின் இந்தியா பிரிக்கப்பட்டபோது, பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதிக்கு குடிபெயர்ந்துவிட்டார். அவரின் தாய் பேகம் அக்ரம். இவருடன் பிறந்தவர்கள் 3 பேர். இவர் அரசு இஸ்லாமியா கல்லூரியில் படித்தார்.
30 வயதில் அவருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டது. அதுகுறித்து கூறுகையில், எனக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டது என்று கேள்விபட்டபோது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் எனது குடும்பத்தில் யாருக்கும் நீரிழிவு நோய் கிடையாது. நானும் ஒரு ஆரோக்கியமான விளையாட்டு வீரன் என்றார். இதனால்தான் அவர் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 1995ம் ஆண்டு ஹீம்மத முப்தி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
14 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவரது மனைவி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது 2009ம் ஆண்டு காலமனார்.
பின்னர் அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷனீரா தாம்சன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு.
இவர் சுல்தான் என்ற சுயசரிதையை 2022ம் ஆண்டு எழுதி வெளியிட்டார். அதில் அவர் பகிர்ந்துகொண்ட நினைவுகள்.
1999ம் ஆண்டு சென்னை டெஸ்ட் குறித்து தனது நினைவுகளையும் பகிர்ந்துக் கொண்ட அவர், சென்னை டெஸ்ட் எனக்கு மிகவும் விசேஷமானது. வெளில் கடுமையான இருந்தது. ஆடுகளம் வெறுமையாக இருந்தது. ஏனென்றால் நாங்கள் ரிவர்ஸ்-ஸ்விங்கை நம்பியிருந்தோம். அந்த காலக்கட்டத்தில் சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவரான சக்லைன் முஷ்டாக் எங்களிடம் இருந்தார். அந்த நேரத்தில் அவர் கண்டுபிடித்த தூஸ்ரா டெலிவரியை யாராலும் அடிக்க முடியவில்லை.
சச்சின் (டெண்டுல்கர்) முதல் இன்னிங்சுக்குப் பின்னர், சக்லைன் முஷ்டாக் பந்தை நன்றாக விளையாடினார். ஒவ்வொரு முறை அவர் தூஸ்ரா வீசும்போதும், சச்சின் ‘கீப்பருக்குப் பின்னால் லேப் ஷாட் அடித்தார். ஆஃப் ஸ்பின்னர்கள் தூஸ்ராவுக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினம். ஆனால் சச்சின் சிறப்பாக விளையாடினார். அதனால் தான் சச்சின் எல்லா காலத்திலும் சிறந்தவர்களில் ஒருவராக இருந்தார். இவ்வாறு தனது சுயசரிதை புத்தகத்தில் வாசிம் அக்ரம் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரராக இருந்தபோதும், 90ஸ் கிட்களின் ஃபேவரைட் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் வாழ்வில் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று வாழ ஹெச்.டி தமிழ் வாழ்த்துகிறது.
டாபிக்ஸ்