தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Sanju Samson: சஞ்சு சாம்சன் இளம் தோனி போல் செயல்படுகிறார்-முன்னாள் இங்கிலாந்து வீரர் புகழாரம்

Sanju Samson: சஞ்சு சாம்சன் இளம் தோனி போல் செயல்படுகிறார்-முன்னாள் இங்கிலாந்து வீரர் புகழாரம்

Manigandan K T HT Tamil

May 11, 2023, 09:04 PM IST

google News
IPL 2023: சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
IPL 2023: சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

IPL 2023: சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், இளம் வயது தோனி போல் செயல்படுகிறார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் புகழாரம் சூட்டினார்.

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) எனப்படும் ஆடவர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 31ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ள 16-வது சீசன் ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன.

ஜியோ சினிமாவில் கிரேம் ஸ்வான் பேசியபோது கூறியதாவது:

ஒவ்வொரு அணியும் சிறப்பாக விளையாடி வருகின்றன. இந்த டாடா ஐபிஎல் கிரிக்கெட்டில் எந்த அணி வேண்டுமானாலும் எந்த அணியையும் வீழ்த்தி விடுகிறது.

கிரேம் ஸ்வான்

நான் இந்த போட்டியை கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக கூர்ந்து கவனித்து வருகிறேன். இந்தத் தருணத்தில் சிறந்த அணியாக குஜராத் அணி திகழ்கிறது. அதேநேரம், நாளை அந்த அணி யாரிடம் வேண்டுமானாலும் தோற்கவும் கூடும்.

டெல்லி அணியை எடுத்துக் கொண்டால் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த சீசனில் தொடக்கமே அந்த அணிக்கு சிறப்பாக அமையவில்லை.

திறமையான வீரர்கள் கொண்ட அணியாக இருந்தாலும், சிறப்பாக செயல்பட்ட போதிலும் அந்த அணியில் பெரும்பாலான போட்டிகளில் ஜெயிக்க முடியவில்லை.

அனைத்து ஆட்டங்களில் ஜெயித்தால் வேண்டுமானால் அந்த அணியின் நிலை மாறலாம். டெல்லி அணி பாலிவுட் பட க்ளைமேக்ஸ் போன்று எப்போதும் வேண்டுமானாலும் சிறப்பாக செயல்பட முடியும்.

சஞ்சு சாம்சனிடம் எனக்கு பிடித்தது சிறந்த கேப்டன்ஷிப் தான். அவரது திறமை சிறப்பாக கேப்டன்ஷிப்பில் வெளிப்படுகிறது.

அவர் இளமை காலத்தில் தோனி செயல்பட்டது போலவே செயல்படுகிறார். எந்தத் தருணத்திலும் பொறுமையை இழக்கவில்லை. சரியாக ஆட்டத்தைக் கணிக்கிறார் என்றார் அவர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி