தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Sanjay Singh: 'இந்த இடைநீக்கத்தை நாங்கள் அங்கீகரிக்கவில்லை'-சஞ்சய் சிங்

Sanjay Singh: 'இந்த இடைநீக்கத்தை நாங்கள் அங்கீகரிக்கவில்லை'-சஞ்சய் சிங்

Manigandan K T HT Tamil

Jan 02, 2024, 12:00 PM IST

google News
இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைப்பின் விவகாரங்களை நிர்வகிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது. (ANI)
இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைப்பின் விவகாரங்களை நிர்வகிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது.

இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைப்பின் விவகாரங்களை நிர்வகிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது.

மத்திய அரசு விதித்த இடைநீக்கத்தையோ அல்லது இந்தியாவில் மல்யுத்தத்தை நிர்வகிக்கும் தற்காலிக குழுவையோ தான் அங்கீகரிக்கவில்லை என்று இடைநீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (டபிள்யூ.எஃப்.ஐ) தலைவர் சஞ்சய் சிங் திங்களன்று தெரிவித்தார். இடைநீக்கம் செய்யப்பட்ட குழு விரைவில் தேசிய சாம்பியன்ஷிப்பை சொந்தமாக ஏற்பாடு செய்யும் என்று அவர் கூறினார்.

பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் விசுவாசியான சஞ்சய் சிங், கடந்த மாதம் நடந்த இந்திய மல்யுத்த கூட்டமைப்புத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். இருப்பினும், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்தத்தில் இருந்து விலகிய சில நாட்களுக்குப் பிறகு, தேசிய விளையாட்டுகளை அறிவிப்பதில் விதிகளை மீறியதாகக் கூறி அந்த அமைப்பை அரசாங்கம் இடைநீக்கம் செய்தது.

பிரிஜ் பூஷண் மீதான பாலியல் புகார் காரணமாக அவரை இந்திய மல்யுத்த அரங்கில் இருந்து நீக்கக் கோரி பல இந்திய மல்யுத்த ஜாம்பவான்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இடைநீக்கத்திற்குப் பிறகு, சிங் மல்யுத்தத்திலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார்.

பின்னர் இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைப்பின் விவகாரங்களை நிர்வகிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது. ஜெய்ப்பூரில் பிப்ரவரி 2 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சஞ்சய் சிங் இந்த குழுவுக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார்.

"நாங்கள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டோம். தேர்தல் அதிகாரி ஆவணங்களில் கையெழுத்திட்டார், அதை அவர்கள் எவ்வாறு புறக்கணிப்பார்கள். இந்த தற்காலிக குழுவை நாங்கள் அங்கீகரிக்கவில்லை" என்று சஞ்சய் பி.டி.ஐ.யிடம் கூறினார்.

"இந்த இடைநீக்கத்தை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. WFI சுமூகமாக செயல்படுகிறது, நாங்கள் வேலையில் இருக்கிறோம். எங்கள் மாநில சங்கங்கள் அணிகளை அனுப்பவில்லை என்றால் அவர்கள் (தற்காலிக குழு) எப்படி நேஷனல் அளவில் போட்டிகளை ஏற்பாடு செய்வார்கள். விரைவில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த உள்ளோம். விரைவில் செயற்குழு கூட்டத்தை கூட்ட உள்ளோம். தேர்தல் ஆணையக் கூட்டத்தின் அறிவிப்பு ஓரிரு நாட்களில் அனுப்பப்படும், அவர்கள் அதைச் செய்வதற்கு முன்பு நாங்கள் நேஷனல்களை ஏற்பாடு செய்வோம், "என்று அவர் மேலும் கூறினார்.

தனது தலைமையிலான டபிள்யூ.எஃப்.ஐ எந்த விதிகளையும் மீறவில்லை என்று சிங் கூறினார்.

தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குப் பிறகு பிப்ரவரி 9 முதல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேசிய மல்யுத்த முகாம்கள் முறையே சோனேபட் மற்றும் பாட்டியாலாவில் தொடங்கும் என்று குழு தெரிவித்துள்ளது.

சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் முடிந்த பிறகு, தேசிய பயிற்சி முகாம் (என்.சி.சி.,) நடத்தப்படும். ஆண்கள் முகாம் (கிரேக்கோ-ரோமன் மற்றும் ஃப்ரீ-ஸ்டைல்) சாய் என்ஆர்சி சோனேபட்டிலும், பெண்கள் முகாம் பாட்டியாலாவின் சாய் என்.எஸ்.என்.ஐ.எஸ்ஸிலும் நடைபெறும்" என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி