தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Cristiano Ronaldo: சிறந்த கிளப் வீரருக்கான பாலன் டி'ஓர் விருதில் நம்பகத்தன்மை இல்லை - ஓபனாக பேசிய ரொனால்டோ

Cristiano Ronaldo: சிறந்த கிளப் வீரருக்கான பாலன் டி'ஓர் விருதில் நம்பகத்தன்மை இல்லை - ஓபனாக பேசிய ரொனால்டோ

Published Feb 07, 2025 05:37 PM IST

google News
Cristiano Ronaldo: சிறந்த கிளப் கால்பந்து வீரர்களுக்கான பாலன் டி'ஓர் விருது வழங்கப்படும் விருது குறித்து நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரெனால்டோ கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஆண்டுக்கான விருதில் ஸ்பெயினின் ரோட்ரியை விட, பிரேசில் வீரர் வினீசியஸ் ஜூனியர் தகுதியானவர் என்று கூறியுள்ளார். (REUTERS)
Cristiano Ronaldo: சிறந்த கிளப் கால்பந்து வீரர்களுக்கான பாலன் டி'ஓர் விருது வழங்கப்படும் விருது குறித்து நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரெனால்டோ கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஆண்டுக்கான விருதில் ஸ்பெயினின் ரோட்ரியை விட, பிரேசில் வீரர் வினீசியஸ் ஜூனியர் தகுதியானவர் என்று கூறியுள்ளார்.

Cristiano Ronaldo: சிறந்த கிளப் கால்பந்து வீரர்களுக்கான பாலன் டி'ஓர் விருது வழங்கப்படும் விருது குறித்து நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரெனால்டோ கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஆண்டுக்கான விருதில் ஸ்பெயினின் ரோட்ரியை விட, பிரேசில் வீரர் வினீசியஸ் ஜூனியர் தகுதியானவர் என்று கூறியுள்ளார்.

கால்பந்து விளையாட்டு உலகில் மிக சிறந்த வீரராக போற்றப்படும் போர்ச்சுகல் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கடந்த இரு நாள்களுக்கு முன் 40 வயதை எட்டினார். தற்போது அவர் சவுதி புரொ லீக் கால்பந்து தொடரில் அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார். இதையடுத்து அடுத்த ஆண்டில் நடைபெற இருக்கும் 2026 ஃபிபா உலகக் கோப்பை தொடரில் அவர் போர்ச்சுகல் அணிக்காக விளையாடுவார் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

ரெனால்டோ தனது கால்பந்து விளையாட்டில் அத்தியாயத்தில் இறுதி கட்டத்தில் உள்ளார். இவரை போலவே ரொனால்டோவின் போட்டியாளராக கருதப்படும் அர்ஜென்டினா வீரரான லியோனல் மெஸ்ஸியும் கடைசி கட்டத்தில் இருந்து வருகிறார். மெஸ்ஸ் தற்போது அமெரிக்காவில் எம்எல்எஸ் (மேஜர் சாக்கர் லீக்) தொடரில் இண்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த இருவரும் தங்களது கால்பந்து விளையாட்டு கேரியர் உச்சத்தில் இருந்தபோது முறையே பார்சிலோன - ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மோதிக்கொண்டனர்.

சமீபத்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த லா செக்ஸ்டா என்ற தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்த ரொனால்டோ,

சிறந்த கிளப் கால்பந்து வீரர்களுக்கு அளிக்கப்படும் பாலன் டி'ஓர் விருது வழங்கப்படும் விருது குறித்து கேள்வி எழுப்பியதோடு கடந்த ஆண்டுக்கான விருதில் ஸ்பெயினின் ரோட்ரியை விட, பிரேசில் வீரர் வினீசியஸ் ஜூனியர் தகுதியானவர் எனவும் தனது கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.

அத்துடன் அதிக முறை பாலன் டி'ஓர் விருது வென்றிருக்கும் மெஸ்ஸியையும் மறைமுகமாக சாடியுள்ளார். ஆண்டுதோறும் அளிக்கப்படும் இந்த விருதை கிறிஸ்டியானா ரெனால்டோ ஐந்து முறை வென்றுள்ளார். ஆனால் லியோனல் மெஸ்ஸி 7 முறை பாலன் டி'ஓர் விருது வென்றிருக்கிறார்.

எனக்கு கோபம் வந்தது

இதுகுறித்து ரொனால்டோ கூறியதாவது, "இந்க விருதில் நம்பகத்தன்மை இல்லை, வினீசியஸ் தான் பாலன் டி'ஓர் வெற்றியாளராக இருக்க வேண்டும். நான் அதை பலமுறை உணர்ந்திருக்கிறேன், எனக்கு கோபமும் வந்தது. காலப்போக்கில் நான் புரிந்துகொண்டேன், இவை வெல்ல முடியாத போர்கள்" என்றார்

என்னை விட சிறந்த வீரர் யாருமில்லை

தொடர்ந்து பேசிய ரொனால்டோ, "நீங்கள் கடந்து வந்த அனைத்தையும் பாராட்டுவதற்கு, உங்களுக்கு ஏதாவது ஒன்று நடக்க வேண்டும். நான் போட்டி மனப்பான்மை உரிய நபராக இருந்தாலும், சில நேரங்களில் நான் சாதித்ததை கூட மறந்துவிடுவேன். நான் வித்தியாசமானவன். என் நிலையில் வேறு யாராவது இருந்திருந்தால், நான் 10 வருடங்களுக்கு முன்பே கால்பந்தை விட்டு வெளியேறியிருப்பேன்.

ரசனை என்பது ஒன்றுதான். இதுவை அல்லது அதுவா என்பதை சொல்ல வேண்டும். நீங்கள் மெஸ்ஸியை, பீலே அல்லது மரடோனா என யாரை விரும்பினாலும் அதை கேட்டுக்கொள்கிறேன். மதிக்கவும் செய்வேன். ஆனால் கிறிஸ்டியானோ முழுமையானவர் அல்ல என்று சொல்வது பொய். என்னை விட சிறந்த வீரர் யாருமில்லை. இதை என இதயத்தில் இருந்து சொல்வேன்" என்றார்.

ரெனால்டோ - மெஸ்ஸி சாதனைகளை ஒப்பீடு

சர்வதேச கால்பந்து அரங்கில் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகிய இருவரும் வென்றிருக்கும் கோப்பைகளில் மொத்த எண்ணிக்கை 77. இதில் மெஸ்ஸி 44, ரெனால்டு 33 கோப்பைகளை வென்றுள்ளார். ஒரே சீசனில் இருவரும் 50 கோல்கள் என்ற தடையை இருவரும் முறியடித்துள்ளனர். அத்துடன் சர்வேதச அளவிலும், கிளப் அணிகளுக்காகவும் இருவரும் முறையை 800 பிளஸ் கோல்களை அடித்தவர்களாக உள்ளார்கள். இதில் மெஸ்ஸி உலகக் கோப்பை வெற்றியாளராகவும், நடப்பு உலகக் கோப்பை சாம்பியனாகவும் உள்ளார்.

 

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.