தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hs Prannoy: மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் - பட்டத்தை வென்ற பிரணாய்

HS Prannoy: மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் - பட்டத்தை வென்ற பிரணாய்

May 29, 2023, 11:14 AM IST

google News
மலேசியா மாஸ்டர்ஸ் 2023 பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் பட்டத்தை வைத்துள்ளார்.
மலேசியா மாஸ்டர்ஸ் 2023 பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் பட்டத்தை வைத்துள்ளார்.

மலேசியா மாஸ்டர்ஸ் 2023 பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் பட்டத்தை வைத்துள்ளார்.

மலேசியா தலைநகரான கோலாலம்பூரில் மலேசியா மாஸ்டர் 2023 பேட்மிட்டன் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீரரான எச்.எஸ் பிரணாய், சீன வீரரான வெங் ஹோங்யாங் உடன் விளையாடினார்.

போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் தரவரிசை பட்டியலில் ஒன்பதாவது இடம் பிடித்த பிரணாய், தொடர்ச்சியான போராட்டத்திற்குப் பிறகு இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றார்.

இந்த போட்டியில் பினராய், 21-19, 13-21, 21-18 என்ற கணக்கில் சீன வீரரை வீழ்த்தி வெற்றி பெற்று பட்டத்தைக் கைப்பற்றினார். இந்த போட்டியில் இவர் பெறக்கூடிய முதல் பட்டம் இதுதான்.

கடந்த ஆறு ஆண்டுகளில் இவரது முதல் ஒற்றை பிரிவு பட்டத்திற்கான வெற்றியின் இதுதான். இந்த போட்டி மொத்தம் 93 நிமிடங்கள் வரை நடைபெற்றது. இவர்களுக்கு முன் இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவைச் சேர்ந்த கிறிஸ்டியன் ஆதிநாதன் காயத்தினால் போட்டியிலிருந்து விலகினார்.

அவர் விலகிய காரணத்தினால் இறுதிப் போட்டிக்குள் பிரணாய் முன்னேறினார். இதற்கு முன்பு கால் இறுதிப் போட்டியில் நிஷிமோடாவுடன் விளையாடினார். கால் இறுதிப் போட்டிக்கு முன் தினம் சுற்றில் லி ஷி பேங்க் ஆகியோரை வீழ்த்தி இறுதியாகப் பட்டத்தை வென்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி