Paris Olympics 2024: நீரஜ் சோப்ரா தலைமை! மொத்தம் 28 வீரர்களை கொண்ட இந்திய தடகள அணி - முழு விவரம்
Jul 05, 2024, 05:35 PM IST
2024 பாரிஸ் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்திய தடகள அணியில் மொத்தம் 17 ஆண்கள் மற்றும் 11 பெண் விளையாட்டு வீரர்கள் என 28 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்த அணிக்கு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமை தாங்குகிறார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வைத்து நடைபெற இருக்கும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் 33வது போட்டியாக அமைந்துள்ளது. ஜூலை 26 முதல் ஆக்ஸ்ட் 11ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
இதையடுத்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய சார்பில் 28 வீரர்கள் கொண்ட இந்திய தடகள அணி பங்கேற்கிறது. இந்த அணியை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வெற்றியாளரான நீரஜ் சோப்ரா வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடகள அணியில் 17 ஆண்கள் மற்றும் 11 பெண்கள் விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.
உலக சாம்பியன் நீரஜ் சோப்ரா
ஈட்டி எறிதல் விளையாட்டில் நடப்பு உலக சாம்பியனாக இருந்து வருகிறார் நீரஜ் சோப்ரா, 2024 கோடைகால ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில், டயமண்ட் லீக்கின் சமீபத்திய பாரிஸ் லெக்கை தவிர்த்தார்.
கடந்த 2020இல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி தந்தார் நீரஜ் சோப்ரா. டோக்கிய ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா மட்டுமே தங்கம் வென்றார். இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்த 7 பதக்கங்களை வென்றது.
இந்திய தடகள அணி ஸ்டார் வீரர்கள்
இந்த அணியில் உறுப்பினர்களாக உள்ள ரேஸ் வாக்கர்களான பிரியங்கா கோஸ்வாமி மற்றும் அக்ஷ்தீப் சிங் ஆகியோர் இந்த ஆண்டு தடகளத்துக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர்கள் ஆவார்கள். ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற அவினாஷ் சேபிள், தேஜிந்தர்பால் சிங் தூர் ஆகியோரும் பதக்கம் வெல்வார்கள் என்ற நம்பிக்கை தரும் வீரர்களாக உள்ளார்கள். குறிப்பிடத்தக்க பெயர்கள்.
பஹாமாஸில் நடைபெறும் உலக தடகள ரிலே 2024 போட்டியில் தகுதி பெற்ற பின்னர் முகமது அனாஸ், முகமது அஜ்மல், அமோஜ் ஜேக்கப் மற்றும் ராஜேஷ் ரமேஷ் ஆகியோரைக் கொண்ட இந்தியாவின் 4*400 மீட்டர் ஆண்கள் ரிலே அணி மிகுந்த ஆர்வத்துடன் பின்பற்றப்படும்.
ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ள டிராக் அண்ட் ஃபீல்ட் போட்டி ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நடத்தப்படும்.
பாரீஸ் செல்லும் விளையாட்டு வீரர்களின் சம்பிரதாய வழியனுப்பு மற்றும் குழுவினரின் விளையாட்டு கருவிகளை திறந்து வைக்கும் போது ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சர் மாண்டவியா கூறுகையில், "இந்த குழு விளையாட்டில் இந்தியா வளர்ச்சிப் பாதையைத் தக்கவைக்கும் என்று நான் நம்புகிறேன்" என்றார்
இந்த தடகள அணி முழு விவரம்
ஆண்கள்
அவினாஷ் சேபிள் (3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), நீரஜ் சோப்ரா, கிஷோர் குமார் ஜெனா (ஈட்டி எறிதல்), தஜிந்தர்பால் சிங் தூர் (குண்டு எறிதல்), பிரவீன் சித்ரவேல், அபுல்லா அபுபக்கர் (டிரிபிள் ஜம்ப்), அக்ஷ்தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் பிஷ்ட் (20 கி.மீ. நடைப்பயிற்சி), முகமது அனாஸ், முகமது அஜ்மல், அமோஜ் ஜேக்கப், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ் (4*400 மீட்டர் ரிலே), மிஜோ சாக்கோ குரியன் (4*400 மீட்டர் ரிலே), சூரஜ் பன்வார் (ரேஸ் வாக் கலப்பு மராத்தான்). சர்வேஷ் அனில் குஷாரே (உயரம் தாண்டுதல்).
பெண்கள்
கிரண் பஹால் (400 மீ), பருல் சவுத்ரி (3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் மற்றும் 5,000 மீ), ஜோதி யர்ராஜி (100 மீட்டர் தடை ஓட்டம்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்), அபா கதுவா (குண்டு எறிதல்), ஜோதிகா ஸ்ரீ தண்டி, சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ், பூவம்மா எம்ஆர் (4*400 மீட்டர் ரிலே), பிராச்சி (4*400 மீ), பிரியங்கா கோஸ்வாமி (20 கி.மீ. நடை / ரேஸ் நடை கலப்பு மராத்தான்).
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்