Paris Olympics 2024: முதல் நாளே சம்பவம்.. கழுத்திற்கு வந்த தங்கப்பதக்கம்.. வெற்றிக்கணக்கை துவங்கிய சீனா!
Jul 27, 2024, 10:01 PM IST
10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில், சீனா முதல் தங்கப் பதக்கத்தை வென்று இருக்கிறது. -வெற்றிக்கணக்கை துவங்கிய சீனா!
33 வது ஒலிம்பிக் போட்டிகள், பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது. 128 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் இல்லாத அளவிற்கு, இம்முறை 206 நாடுகளை சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இருக்கின்றனர்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டு, 2024ம் ஆண்டு ஒலிம்பிக் திருவிழாவை தொடங்கி வைத்தார். இந்த ஒலிம்பிக் திருவிழாவில், அவருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ஸ்டாமர், ஜெர்மன் பிரதமர் ஸ்கோல்ஸ் உள்ளிட்ட தலைவர்களோடு, முக்கிய பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
வெற்றிக்கணக்கை துவங்கிய சீனா!
சனிக்கிழமையான இன்றைய தினம், 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில், சீனா முதல் தங்கப் பதக்கத்தை வென்று, தனது வெற்றிக்கணக்கை தொடங்கி இருக்கிறது.
இன்றைய தினம் காலை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில், சீனாவின் ஹுவாங் மற்றும் ஷெங் ஆகியோர், தென் கொரியாவின் கியூம் ஜிஹியோன் மற்றும் பார்க் ஹஜுன் ஆகியோருக்கு களம் இறங்கினர். இந்த போட்டியில் 16 -12 என்ற கணக்கில் முன்னிலை பெற்று சீனா தன்னுடைய முதல் தங்கப்பதக்கத்தை வென்றது.
இந்தியாவில் எத்தனை வீரர்கள் இருக்கிறார்கள்
நமது இந்தியாவை பொறுத்தவரை, துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், தடகளம், டென்னிஸ், ஹாக்கி என மொத்தமாக, 117 விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்று இருக்கின்றனர். இதில் 70 பேர் ஆண்களாகவும், 47 பேர் பெண்களாகவும் இருக்கிறார்கள்.
இதில், இதர விளையாட்டு போட்டிகளில் 29 விளையாட்டு வீரர்கள் பங்கேற்று உள்ளனர். அதில் 11 ஆண்களும், 18 பெண்களும் இடம் பெற்று இருக்கின்றனர். 21 விளையாட்டு வீரர்கள் துப்பாக்கி சுடுதல் போட்டிகளிலும், 19 பேர் ஹாக்கி போட்டிகளிலும் பங்கேற்று உள்ளனர்.
நேற்று தொடங்கிய இந்த ஒலிம்பிக் திருவிழா, ஆகஸ்ட் 11 ஆம் தேதி நிறைவடைகிறது. பிரேக்கிங், ஸ்கேட்போர்டிங், சர்ஃபிங் உள்ளிட்டவற்றோடு மொத்தமாக 32 வகையான விளையாட்டு ப ட்டிகள் இதில் இடம் பெறுகின்றன.
இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் முதல் நாளில் எவ்வாறு செயல்பட்டன என்பது குறித்தான பட்டியல் இங்கே!
பாரிஸ் 2024 ஒலிம்பிக் — பதக்கப் பட்டியல் (முதல் 10 நாடுகள் மற்றும் இந்தியா)
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்