தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Paris Olympics 2024:அடுத்தடுத்து 2 கோல்கள்.. பட்டையை கிளப்பிய ஹர்மன்பிரீத்!- அயர்லாந்தை ஊதி தள்ளிய இந்தியா!

Paris Olympics 2024:அடுத்தடுத்து 2 கோல்கள்.. பட்டையை கிளப்பிய ஹர்மன்பிரீத்!- அயர்லாந்தை ஊதி தள்ளிய இந்தியா!

Jul 30, 2024, 09:32 PM IST

google News
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில், ஹர்மன்பிரீத்தின் கடைசி நேர பெனால்டி ஷூட்டில் அடித்த கோல், இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது. - அயர்லாந்தை ஊதி தள்ளிய இந்தியா! (PTI)
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில், ஹர்மன்பிரீத்தின் கடைசி நேர பெனால்டி ஷூட்டில் அடித்த கோல், இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது. - அயர்லாந்தை ஊதி தள்ளிய இந்தியா!

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில், ஹர்மன்பிரீத்தின் கடைசி நேர பெனால்டி ஷூட்டில் அடித்த கோல், இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது. - அயர்லாந்தை ஊதி தள்ளிய இந்தியா!

பாரீஸ் ஒலிம்பிக்கில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்கின் அசத்தல் ஆட்டத்தால், இந்திய ஆடவர் ஹாக்கி அணியானது, காலிறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது. 

அயர்லாந்துடன் மோதிய இந்தியா

பாரீஸில் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. செவ்வாய் கிழமையான இன்றைய தினம் நடைபெற்ற ஹாக்கி ‘பி’ பிரிவு ஆட்டத்தில், இந்தியா அயர்லாந்தை எதிர்கொண்டது. முந்தைய இரண்டு போட்டிகள் போலல்லாமல் ஆரம்பம் முதலே இந்திய அணி, எதிரணி வட்டத்திற்குள் ஊடுருவி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அயர்லாந்து அணியும் மோதுவதற்கு எளிதான அணி என்பதால், ஆட்டமும் எதிர்பார்த்தது போலவே இருந்தது. 

இரண்டாம் பாதியில் சொதப்பல் - ஹர்மன்பிரீத் சிங்!

ஆனாலும், முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, இரண்டாம் பாதியில் அந்த அளவு சிறப்பாக விளையாட வில்லை. இருப்பினும் கேப்டன் ஹர்மன்பிரீத் அடித்த கோல்களால் இந்தியா வெற்றியை தன் வசப்படுத்தியது. ஆம், ஆட்டம் தொடங்கிய 13-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்த கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்,அடுத்த 19-வது நிமிடத்தில், மற்றொரு கோல் அடித்து அசத்தினார். அவர் அடித்த கோல்களால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் அயர்லாந்தை வென்று, காலிறுதி வாய்ப்பை தக்க வைத்திருக்கிறது. 

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில், ஹர்மன்பிரீத்தின் கடைசி நேர பெனால்டி ஷூட்டில் அடித்த கோல், இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது. அதே போல அர்ஜெண்டினா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், ஆட்டத்தின் 59 நிமிடத்தில் 4-வது பெனால்டி கார்னரில், ஹர்மன்பிரீத் அடித்த கோல் ஆட்டத்தை சமன் செய்தது

இந்திய அணியின் நிலை எப்படி? 

இதுவரை 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று இருக்கிறது. முன்னதாக, நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, அர்ஜென்டினாவை 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இந்த பிரிவில் நான்காவது இடத்திற்காக, அர்ஜென்டினா, நியூசிலாந்து அணிகள் மோத வாய்ப்புள்ளது. 

இரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். ஆக, மூன்று போட்டிகளின் முடிவில் 7 புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் தோற்ற காரணத்தால் காலிறுதி போட்டியில் இருந்து அயர்லாந்த் வெளியேற்றியுள்ளது. பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் களமிறங்குகின்றன.

பாரீஸ் ஒலிம்பிக்கில், ஆண்கள் ஹாக்கி போட்டியில் 12 அணிகள், இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் போட்டிகளில் அணிகள் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோதும். மேலும், ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள், காலிறுதிக்கு முன்னேறும். காலிறுதி போட்டிகள் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறுகின்றன. அரையிறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் 6-ஆம் தேதியிலும், பதக்கச் சுற்று ஆட்டங்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதியும் நடைபெற உள்ளன.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி