தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Paris Olympics 2024: தங்கத்தை தக்க வைக்க களமிறங்கும் நீரஜ் சோப்ரா! இந்திய தடகள அணி முழு விபரம்

Paris Olympics 2024: தங்கத்தை தக்க வைக்க களமிறங்கும் நீரஜ் சோப்ரா! இந்திய தடகள அணி முழு விபரம்

Aug 01, 2024, 02:48 PM IST

google News
ஒலிம்பிக்கில் வென்ற தங்க பதக்கத்தை தக்க வைக்க இந்தியாவின் இளம் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனக்கான போட்டியில் இன்று களமிறங்கவுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் 2024க்கான தடகள விளையாட்டில் இந்தியாவின் முழு அட்டவணை, இந்திய தடகள அணியின் விபரம். (HT)
ஒலிம்பிக்கில் வென்ற தங்க பதக்கத்தை தக்க வைக்க இந்தியாவின் இளம் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனக்கான போட்டியில் இன்று களமிறங்கவுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் 2024க்கான தடகள விளையாட்டில் இந்தியாவின் முழு அட்டவணை, இந்திய தடகள அணியின் விபரம்.

ஒலிம்பிக்கில் வென்ற தங்க பதக்கத்தை தக்க வைக்க இந்தியாவின் இளம் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனக்கான போட்டியில் இன்று களமிறங்கவுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் 2024க்கான தடகள விளையாட்டில் இந்தியாவின் முழு அட்டவணை, இந்திய தடகள அணியின் விபரம்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க நம்பிக்கையில் முக்கியமானவராக இருப்பவர் நீரஜ் சோப்ரா. பையனுக்காக ஒரு சிறப்பு ஆதரவாளர் காத்திருக்கிறார். இவரது ஆட்டத்தை காண்பதற்காகவே கேரள மாநிலத்தில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாரிஸை நோக்கி ஒருவர் சைக்களில் பயணத்தை மேற்கொள்ள தொடங்கவிட்டார். அதன்படி 22,000 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்து தற்போது நீரஜ் ஆட்டத்தை அந்த நபர் பார்க்கவுள்ளார்.

கடந்த 2022, ஆகஸ்ட் 15, இந்தியாவின் சுதந்திர தின சிறப்பு நாளில் தனது பயணத்தைத் தொடங்கிய ஃபாயிஸ் அஸ்ரஃப் அலி என்கிற கேரளா மாநிலத்தை சேர்ந்த நபர், ஒலிம்பிக் விளையாட்டை காண்பதற்காக 30 நாடுகளில் பயணம் செய்தார்.

தடகள போட்டிகள் தொடக்கம்

2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 29 பேர் கொண்ட வீரர்கள், வீராங்கனைகள் அடங்கிய தடகள அணிக்கு நீரஜ் தலைமை தாங்குகிறார். ஈட்டி எறிதல் சாம்பியனான நீரஜ் தலைமையில், 16 பதக்க நிகழ்வுகளில் இந்த பதக்க வேட்டைக்காக களமிறங்க இருக்கிறார்கள். ஆகஸ்ட் 1 முதல் தொடங்கும் தடகள போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில், அனைத்து டிராக் மற்றும் ஃபீல்டு நிகழ்வுகளுக்கும் ஸ்டேட் டி பிரான்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.

நீரஜ் மீதான எதிர்பார்ப்பு

பந்தய நடை நிகழ்வுகள் பாண்ட் டி ஐனா-இல் வைத்து போட்டியிடப்படுகிறது. அதே நேரத்தில் இரண்டு மராத்தான் பந்தயங்கள் லெஸ் இன்வாலிடெஸில் முடிவதற்கு முன்பு ஹோட்டல் டி வில்லேவிலிருந்து கொடியசைத்து தொடங்கப்படுகிறது. டோக்கியோ கேம்ஸ் 2020ல் தடகளப் போட்டியில் இந்தியாவின் முதல் ஒலிம்பிக் தங்கத்தை நீரஜ் வென்றார். டோக்கியோ கேம்ஸில் அவரது அற்புதமான ஆட்டத்தைத் தொடர்ந்து, நீரஜ் 2022இல் டயமண்ட் லீக் பட்டத்தையும், 2023 இல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.

ஈட்டி சூப்பர் ஸ்டார் பாரிஸ் வந்தடைந்த நிலையில், அவர் மீது அனைவரின் கண்களும் உள்ளது. எனவே ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்திய தடகள நட்சத்திரங்கள்

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் கிஷோர் ஜெனாவுடன், நீரஜ் இணைந்து பங்கேற்கவுள்ளார். 2023ஆம் ஆண்டு ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீரஜை பின்னுக்குத் தள்ளி ஜெனா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அதேபோல் இந்தியாவின் முஹம்மது அனஸ், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தனது மூன்றாவது தொடர்ச்சியான தோற்றத்தைப் பதிவு செய்கிறார். ஹர்ட்லர் ஜோதி யர்ராஜி மற்றும் ஸ்டீப்பிள் சேசர் பாருல் செளத்ரி ஆகியோர் பாரிஸ் ஒலிம்பிக்கில் அறிமுகமாகிறார்கள்.

ஸ்டீப்பிள்சேஸர் விளையாட்டில் அவினாஷ் சேப்லே, தேசிய சாதனை படைத்த தஜிந்தர்பால் சிங் டூர், ரேஸ் வாக்கர் பிரியங்கா கோஸ்வாமி மற்றும் ரிலே ஓட்டப்பந்தய வீரர்களான முகமது அனஸ், அமோஜ் ஜேக்கப் மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோரும் இந்தியாவின் நட்சத்திரங்கள் நிறைந்த தடகளக் குழுவின் ஒரு பகுதியாக உள்ளனர்.

பாரீஸ் 2024 ஒலிம்பிக்கிற்கான இந்திய தடகள அணி:

ஆண்கள் அணி

அவினாஷ் சேபிள் (3000மீ ஸ்டீபிள்சேஸ்)

நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்)

கிஷோர் ஜெனா (ஈட்டி எறிதல்)

தஜிந்தர்பால் சிங் தூர் (ஷாட் புட்)

பிரவீன் சித்திரவேல் (மும்முறை தாண்டுதல்)

அப்துல்லா அபூபக்கர் (மும்முறை தாண்டுதல்)

சர்வேஷ் குஷாரே (உயரம் தாண்டுதல்)

அக்ஷ்தீப் சிங் (20 கிமீ பந்தய நடை)

விகாஷ் சிங் (20 கிமீ பந்தய நடை)

பரம்ஜீத் சிங் பிஷ்ட் (20 கிமீ பந்தய நடை)

முஹம்மது அனஸ் (4x400 மீ தொடர் ஓட்டம்)

முஹம்மது அஜ்மல் (4x400மீ தொடர் ஓட்டம்)

அமோஜ் ஜேக்கப் (4x400மீ ரிலே)

சந்தோஷ் குமார் தமிழரசன் (4x400 மீ தொடர் ஓட்டம்)

ராஜேஷ் ரமேஷ் (4x400மீ தொடர் ஓட்டம்)

மிஜோ சாக்கோ குரியன் (4x400மீ தொடர் ஓட்டம்)

சூரஜ் பன்வார் (ரேஸ் வாக் கலப்பு மராத்தான்)

ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்)

பெண்கள் அணி

கிரண் பஹல் (400 மீ)

பருல் சவுத்ரி (3000மீ ஸ்டீபிள்சேஸ் மற்றும் 5,000மீ)

ஜோதி யர்ராஜி (100 மீ தடை ஓட்டம்)

அன்னு ராணி (ஈட்டி எறிதல்)

ஜோதிகா ஸ்ரீ தண்டி (4x400மீ தொடர் ஓட்டம்)

சுபா வெங்கடேசன் (4x400மீ தொடர் ஓட்டம்)

வித்யா ராம்ராஜ் (4x400 மீ தொடர் ஓட்டம்)

எம்.ஆர்.பூவம்மா (4x400மீ தொடர் ஓட்டம்)

பிராச்சி (4x400மீ ரிலே)

பிரியங்கா கோஸ்வாமி (20 கிமீ பந்தய நடை மற்றும் பந்தய நடை கலப்பு மராத்தான்)

அங்கிதா தியானி (5000 மீ)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

அடுத்த செய்தி