தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Manu Bhaker: சாதித்த மனு பாக்கர்..துப்பாக்கி சுடுதலில் வெண்கலம்! பதக்க கணக்கை தொடங்கிய இந்தியா

Manu Bhaker: சாதித்த மனு பாக்கர்..துப்பாக்கி சுடுதலில் வெண்கலம்! பதக்க கணக்கை தொடங்கிய இந்தியா

Jul 28, 2024, 08:19 PM IST

google News
துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒலிம்பிக் பதக்கத்துக்காக 12 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, துப்பாக்கி சுடுதல் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர் பெற்றார். (AP)
துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒலிம்பிக் பதக்கத்துக்காக 12 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, துப்பாக்கி சுடுதல் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர் பெற்றார்.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒலிம்பிக் பதக்கத்துக்காக 12 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, துப்பாக்கி சுடுதல் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர் பெற்றார்.

பாரிஸ் ஒலிம்பிக் 2024இல் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் போட்டியில், 22 வயதாகும் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் பதக்கம் வென்று சாதித்துள்ளார். இதன்மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா தனது பதக்க கணக்கை தொடங்கியுள்ளது. 

12 வருட காத்திருப்புக்கு பின் பதக்கம்

துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒட்டுமொத்த ஒலிம்பிக் பதக்கத்துக்காக 12 வருட காத்திருப்புக்கு மனு பாக்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். துப்பாக்கி சுடுதலில் முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 

கடைசியாக 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா பதக்கம் வென்றது,. அப்போது ரேபிட் ஃபயர் பிஸ்டல் ஷூட்டர் விஜய் குமார் வெள்ளியும், 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் வீரர் ககன் நரங் வெண்கலமும் வென்றார்கள்.

20 ஆண்டுக்கு பின் சாதனை 

தகுதிச் சுற்றில் 580 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்த மனு பாக்கர், 10 மீட்டர் பெண்கள் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் இறுதி சுற்றுக்குள் நுழைந்தார். ஒலிம்பிக்கில் தனிநபர் துப்பாக்கிச் சுடுதல் நிகழ்வில் நேரடியாக நுழைந்த மூன்றாவது இந்திய பெண்மணி என்ற பெருமையை பெற்றார் மனு பாக்கர். 

இதற்கு முன் 2004ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீராங்கனையான சுமா ஷிரூர் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார் . இதன் பின்னர் தற்போது மனு பாக்கர் தனி நபர் துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டியில் நேரடியாக நுழைந்திருப்பது சாதனையாக அமைந்தது.

வெள்ளி பதக்கத்தை தவறவிட்ட மனு

இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 221.7 என்ற புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். 0.1 புள்ளிகள் வித்தியாசத்தில் வெள்ளி பாதக்கம் பெறும் வாய்ப்பை தவற விட்டார் மனு.

தென் கொரியாவின் கிம் யெஜியை, மனுவை விட 0.1 புள்ளிகள் முன்னிலை பெற்ற வெள்ளி பதக்கத்தை வென்றார். முன்னதாக, தனது கடைசி ஷாட்டில் மனு பாக்கர் 10.3ஐ பதிவு செய்தார்.  அதே நேரத்தில் கொரிய வீராங்கனை 10.5ஐ பெற்று முன்னேறினார்.

தென் கொரியாவின் ஓ யே ஜின், தங்கப் பதக்கம் வென்றார். மொத்தம் 243.2 புள்ளிகளை பெற்ற அவர், ஒலிம்பிக் சாதனையை முறியடித்து அவர் இந்த பதக்கத்தை வென்றுள்ளார். 

இதற்கு முன்னர்ரஷ்யா துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான விட்டலினா பட்சர்க்‌ஷ்கினாவின் முந்தைய சாதனையான 240.3ஐ, பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் தனிநபர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் கொரிய வீராங்கனை ஓ யே ஜின் முந்தி சாதித்துள்ளார்.

மனு பாக்கர் தனது 16 வயதில் காமன்வெல்த் போட்டிகள், யூத் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதித்தார். இதன் பின்னர் தற்போது முதலாவது ஒலிம்பிக் பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி