Asian Games 2023: ஆசிய விளையாட்டு - பதக்கங்களை குவிக்கும் இந்தியா!
Oct 07, 2023, 07:57 AM IST
ஆசிய விளையாட்டு போட்டிகளில் 99 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.
ஆசிய விளையாட்டு மகளிர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் தங்கபதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
சீனாவின் ஹாங்சு நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் 23-ல் தொடங்கியது. 45 நாடுகளை சேர்ந்த 12,000 பேர் பங்கேற்று வருகின்றனர். இதில், இந்தியா சார்பில் 655 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று 15-வது நாளாக நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், ஆசிய விளையாட்டு மகளிர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் தங்கபதக்கம் வென்று அசத்தியுள்ளார். தென் கொரிய வீராங்கனையை 149-145 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கபதக்கத்தை ஜோதி வென்றுள்ளார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீரர் ஒஜாஸ் டியோடாலே 148 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றுள்ளார். மற்றொரு இந்திய வீரரான அபிஷேக் வர்மா 147 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 23 தங்கம், 34 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 99 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. இதற்கு முன்பு 2018-ல் 16 தங்கம், 1951-ல் 15 தங்கம், 2010-ல் 14 தங்கம் இந்தியா வென்றிருந்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்