தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Kkr Vs Gt: குர்பாஸ், ரசல் அதிரடி! புரட்டி எடுக்கப்பட்ட ரஷித்கான்! குஜராத்துக்கு சவாலான இலக்கு

KKR vs GT: குர்பாஸ், ரசல் அதிரடி! புரட்டி எடுக்கப்பட்ட ரஷித்கான்! குஜராத்துக்கு சவாலான இலக்கு

Apr 29, 2023, 06:31 PM IST

google News
குஜராத் அணியின் முக்கிய பெளலரான ரஷித் கான் ஓவரை கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் புரட்டி எடுத்து ரன் குவிப்பில் ஈடுபட்டதோடு அவருக்கு விக்கெட்டையும் கொடுக்கவில்லை. இந்த சீசனில் மோசமான ஆட்டமாக அவருக்கு அமைந்துள்ளது. (AFP)
குஜராத் அணியின் முக்கிய பெளலரான ரஷித் கான் ஓவரை கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் புரட்டி எடுத்து ரன் குவிப்பில் ஈடுபட்டதோடு அவருக்கு விக்கெட்டையும் கொடுக்கவில்லை. இந்த சீசனில் மோசமான ஆட்டமாக அவருக்கு அமைந்துள்ளது.

குஜராத் அணியின் முக்கிய பெளலரான ரஷித் கான் ஓவரை கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் புரட்டி எடுத்து ரன் குவிப்பில் ஈடுபட்டதோடு அவருக்கு விக்கெட்டையும் கொடுக்கவில்லை. இந்த சீசனில் மோசமான ஆட்டமாக அவருக்கு அமைந்துள்ளது.

ஐபிஎல் 2023 தொடரின் 39வது போட்டி கொல்கத்தா நைட் ரைடரஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மழையால் இந்தப் போட்டி 45 நிமிடம் தாமதமாக தொடங்கியது.

முதலில் பேட் செய்த கொலகத்தா அணி 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்துள்ளது. கொல்கத்தா அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஜேசன் ராய் காயம் காரணமாக விளையாடாத நிலையில், இன்றைய போட்டியில் நாரயண் ஜெகதீசன், ரஹமன்னுல்லா குர்பாஸ் ஆகியோர் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர்.

அதிரடியான தொடங்கிய நாரயண் ஜெகதீசன் 19 ரன்னில் அவுட்டானார். அப்போது பவர் ப்ளே ஓவர் முடிவடையாமல் இருந்ததால், பெளலிங் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை புரொமோட் செய்து மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறக்கினர். ஆனால் இந்த திட்டம் கொல்கத்தாவுக்கு பலன் அளிக்கவில்லை. ஷர்துல் தாக்கூர் டக் அவுட்டாகி ஏமாற்றினார்.

இதன் பின்னர் பேட் செய்ய வந்த வெங்கடேஷ் ஐயர், 11, நிதிஷ் ராணா 4 என ஏமாற்றினர். இதற்கிடையே தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிரடியாக பேட் செய்து வந்த ரஹ்மானுல்லா அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

அதன் பின்னரும் தனது அதரிடியை தொடர்ந்து பவுண்டரி, சிக்ஸர்களாக பறக்கவிட்டார். 39 பந்துகளில் 81 பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் ஏமாற்றினார். 20 பந்துகளை எதிர்கொண்ட அவர் 19 ரன்கள் எடுத்து அவுட்டடானார்.

இதையடுத்து கொல்கத்தா அணிக்காக அதன் உள்ளூர் மைதானத்தில் 100வது போட்டியில், தனது 35வது பிறந்தநாளன்று களமிறங்கிய ஆண்ட்ரே ரசல் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி, கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்தினார்.

19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த ரசல், ஆட்டத்தின் கடைசி ஓவரில் அவுட்டானார். இதைத்தொடர்ந்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 179 ரன்கள் எடுத்துள்ளது.

குஜராத் பெளர்களில் முகமது ஷமி 3, ஜோஷ் லிட்டில், நூர் அகமத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். குஜராத் அணியின் ஸ்டிரைக் பெளலராக திகழ்ந்த வந்த ரஷித்கான் ஓவரை கொல்கத்தா பேட்ஸ்மேன் குர்மாஸ் புரட்டி எடுத்தார். இதனால் அவர் 4 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்தார். அத்துடன் அவருக்கு விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்

அடுத்த செய்தி