கே.எல். ராகுல் அதிரடி! டெல்லி வெற்றிக்கு 196 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது லக்நெள
May 01, 2022, 06:13 PM IST
மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்நெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 195 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 15 வது சீசன் 45-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், லக்நௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற லக்நௌ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியில் ஓபனர் குவின்டன் டி காக் 13 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து கே.எல்.ராகுல், தீபக் ஹூடா இருவரும் கூட்டணி அமைத்து ரன்களை சேர்க்க ஆரம்பித்தார்கள். தீபக் ஹூடா கேப்டன் ராகுலுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தனர். ஹூடா 34 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகினார்.
சிறப்பாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் 51 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உதவியுடன் இந்த ரன்களை எடுத்தார். இறுதியில் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 17 (16), க்ருனால் பாண்டியா 9 (6) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்த நிலையில், லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை சேர்த்தது.
இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியுள்ளது. டெல்லி அணி சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் கைப்பற்றினார்.
டாபிக்ஸ்