தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  World Wrestling Championship: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை

World Wrestling Championship: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை

Manigandan K T HT Tamil

Sep 22, 2023, 09:29 AM IST

google News
Antim Panghal: செர்பியா தலைநகர் பெல்கிரேட்டின் ஸ்டார்க் அரீனாவில் வியாழக்கிழமை இரவு நடந்த மல்யுத்த போட்டியில் பங்கேற்றார். (@DDNewslive)
Antim Panghal: செர்பியா தலைநகர் பெல்கிரேட்டின் ஸ்டார்க் அரீனாவில் வியாழக்கிழமை இரவு நடந்த மல்யுத்த போட்டியில் பங்கேற்றார்.

Antim Panghal: செர்பியா தலைநகர் பெல்கிரேட்டின் ஸ்டார்க் அரீனாவில் வியாழக்கிழமை இரவு நடந்த மல்யுத்த போட்டியில் பங்கேற்றார்.

வெண்கலம் வென்றதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இளம் இந்தியர் என்ற பெருமையையும், பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான இடத்தையும் பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளார் அன்டிம் பங்கால்.

செர்பியா தலைநகர் பெல்கிரேட்டின் ஸ்டார்க் அரீனாவில் வியாழக்கிழமை இரவு நடந்த மல்யுத்த போட்டியில் பங்கேற்றார். உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் மகளிர் 53 கிலோ எடைப்பிரிவின் வெண்கலப் பதக்கப் போட்டியில் ஸ்வீடனின் இரண்டு முறை ஐரோப்பிய சாம்பியனான ஜோனா மால்ம்கிரென்னின் சவாலை 16-6 என்ற கணக்கில் வென்றார்.

ஒரு மாதத்திற்கு முன்பு தனது 19-வது பிறந்தநாளைக் கொண்டாடிய அன்டிம், உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இளம் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த வெற்றியின் மூலம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரண்டாவது முறையாக ஜூனியர் உலக பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அவர், அடுத்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான இடத்தையும் உறுதி செய்தார்.

19 வயதான இவருக்கு உலக சாம்பியன்ஷிப் ஒரு முக்கியமான போட்டியாக இருந்தது. கடந்த ஆண்டு ஜூனியர் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்ற இவர், இந்திய மல்யுத்தத்தில் அடுத்த பெரிய விஷயமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வினேஷ் ஆசிய விளையாட்டு மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து விலக நேர்ந்தபோது, அது அன்டிமுக்கு இறுதியாக தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பை வழங்கியது.

"அன்டிம் தங்கப் பதக்கத்திற்காகப் போராட வேண்டும் என்று நினைத்து உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குச் சென்றிருந்தார். வேறு எந்த பதக்கத்தையும் பற்றி அவர் யோசிக்கவில்லை. தனது பிரிவில் இந்தியாவின் சிறந்த மல்யுத்த வீராங்கனை என்று மக்கள் நம்புவதற்கு தங்கம் வெல்ல வேண்டும் என்று அவருக்குத் தெரியும். ஆனால் அது அப்படி இருக்கவில்லை", என்று ஹிசார் பாபா லால் தாஸ் குஷ்தி அகாடாவில் ஆன்டிம் பயிற்சியாளராக இருக்கும் விகாஸ் பரத்வாஜ் கூறுகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி