தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்..பதக்கம் உறுதி..பெண்கள் இரட்டையர் பிரிவில் வரலாறு படைத்த இந்திய ஜோடி

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்..பதக்கம் உறுதி..பெண்கள் இரட்டையர் பிரிவில் வரலாறு படைத்த இந்திய ஜோடி

Oct 12, 2024, 05:54 PM IST

google News
ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் முறையாக அரையிறுதிக்கு நுழைந்தது வரலாறு படைத்தது இந்திய ஜோடி. அய்ஹிகா முகர்ஜி மற்றும் சுதிர்தா முகர்ஜி ஆகியோர் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளனர். (UTT)
ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் முறையாக அரையிறுதிக்கு நுழைந்தது வரலாறு படைத்தது இந்திய ஜோடி. அய்ஹிகா முகர்ஜி மற்றும் சுதிர்தா முகர்ஜி ஆகியோர் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் முறையாக அரையிறுதிக்கு நுழைந்தது வரலாறு படைத்தது இந்திய ஜோடி. அய்ஹிகா முகர்ஜி மற்றும் சுதிர்தா முகர்ஜி ஆகியோர் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

கஜகஸ்தான் நாட்டின் ஆஸ்தானா நகரில் ஆசிய டேபிள் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. அக்டோப் 6ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் அக்டோபர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, சீனா, ஜப்பான், சீனா தைப்பே, ஹாங்காங், தென் கொரியா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.

இதுவரை இந்தியா இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியாவின் ஆண்கள் அணி, பெண்கள் அணி தலா ஒரு பதக்கங்களை வென்றுள்ளது.

பெண்கள் இரட்டையர் பிரிவில் பதக்கம்

இதையடுத்து பெண்களுக்கான இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் அய்ஹிகா முகர்ஜி மற்றும் சுதிர்தா முகர்ஜி ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இதன்மூலம் இருவரும் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

வரலாறு படைத்த இந்திய ஜோடி

ஹான்சு நகரில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் அய்ஹிகா மற்றும் சுதிர்தா ஜோடி வெண்கலம் வென்றது. இதையடுத்து தற்போது தென் கொரியாவின் கிம் நேயோங் மற்றும் லீ யூன்ஹே ஜோடியை 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

காலிறுதி போட்டியில் இந்த ஜோடிகள் 10-12, 11-7, 11-9, 11-8 என்ற செட் கணக்கில் தென் கொரியா ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கத்தை உறுதி செய்தது.

இந்த வெற்றியின் மூலம் ஆசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு நுழைந்த முதல் ஜோடி என்ற பெருமையை பெற்றுள்ளது.

முன்னதாக, இந்த தொடர் 1952இல் சிங்கப்பூரில் தொடங்கப்பட்டபோது, ஜப்பானின் யோஷிகோ தனகா என்பவருடன் இணைந்து கூல் நாசிக்வாலா இணைந்து விளையாடி இறுதி வரை சென்று தங்க பதக்கமும் வென்றார்.

உலக அளவில் நம்பர் 15 இடத்தை பிடித்திருக்கும் அய்ஹிகா மற்றும் சுதிர்தா ஜோடி, ஜப்பானின் மிவா ஹரிமோடோ மற்றும் மியு கிஹாரா ஜோடியை அரையிறுதியில் எதிர்கொள்ள இருக்கிறார்கள். இந்த போட்டி நாளை நடைபெற இருக்கிறது

ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம்

ஆண்கள் ஒற்றையர் பரிவு ஆட்டத்தில் இந்தியாவின் மனுஷ் ஷா மற்றும் மானவ் தக்கர் ஆகியோர் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் தோல்வியை தழுவி வெளியேறினர்.

உலக தரவரிசையில் 115வது இடத்தில் இருக்கும் மனுஷ் ஷா, 23வது இடத்தில் இருக்கும் முன்னாள் உலக சாம்பியனான ஆன் ஜெய்யூன் என்பவரை எதிர்கொண்டார்.11-9, 11-5, 11-6 புள்ளிகள் பெற்று 3-0 என்ற கணக்கில் மனுஷ் ஷா சூப்பரான வெற்றியை பெற்றார்.

மற்றொரு போட்டியில் உலக தரவரிசையில் 60வது இடத்தில் இருக்கும் மானவ் தக்கர், ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற தரவரிசையில் 14வது இடத்தில் இருக்கும் ஜாங் வூஜின் என்பவருக்கு எதிராக 3-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார். கடுமையான சவால் கொடுத்த ஜாங் வூஜின்க்கு எதிராக 5-11, 11-9, 5-11, 11-9, 11-7 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன் பின்னர் நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டியில் சீனா தைப்பே வீரர் யுன்-ஜூக்கு எதிராக மனுஷ் ஷா 2-3 கணக்கில் தோல்வியை தழுவினார். 12-14, 11-6, 11-7, 5-11, 8-11 என்ற புள்ளிகளை பெற்றார்.

அதேபோல் மானவ் தாக்கரும், ஹாங்காங்கின் சான் பால்ட்வின் என்பவருக்கு எதிராக 0-3 என்ற மோசமான தோல்வியை தழுவினார். தாக்கர் 4-11, 4-11, 8-11 என்ற புள்ளிகளை பெற்றார்.

முன்னதாக, ஆண்கள் ஒற்றையர் பிரவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், உலக தரவரிசையில் 30வது இடத்தை பிடித்திருக்கும் தென் கொரியா வீரர் லிம் ஜாங்ஹூன் என்பவருக்கு எதிராக 0-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார். இந்திய வீரர் 12-14, 7-11, 7-11 ஆகிய புள்ளிகளை பெற்று முதல் சுற்றில் இருந்தே வெளியேறினார்.

 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி