தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Euro 2024: பெனால்டி ஷூட்அவுட்டில் போர்ச்சுகல் அணியை வீழ்த்திய பிரான்ஸ்! தோல்வியுடன் முடிவுற்ற ரொனால்டோ அத்தியாயம்?

Euro 2024: பெனால்டி ஷூட்அவுட்டில் போர்ச்சுகல் அணியை வீழ்த்திய பிரான்ஸ்! தோல்வியுடன் முடிவுற்ற ரொனால்டோ அத்தியாயம்?

Jul 06, 2024, 05:51 PM IST

google News
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்ற யுரோ 2024 கால்பந்து தொடர் காலிறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை பெனால்டி ஷூட்அவுட்டில் வீழ்த்திய பிரான்ஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஸ்பெயின் அணியை அரையிறுதியில் எதிர்கொள்ள இருக்கிறது. (AFP)
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்ற யுரோ 2024 கால்பந்து தொடர் காலிறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை பெனால்டி ஷூட்அவுட்டில் வீழ்த்திய பிரான்ஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஸ்பெயின் அணியை அரையிறுதியில் எதிர்கொள்ள இருக்கிறது.

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்ற யுரோ 2024 கால்பந்து தொடர் காலிறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை பெனால்டி ஷூட்அவுட்டில் வீழ்த்திய பிரான்ஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஸ்பெயின் அணியை அரையிறுதியில் எதிர்கொள்ள இருக்கிறது.

யூரோ 2024 கால்பந்து தொடரின் நாக்அவுட் போட்டிகள் முடிவுற்று காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் காலிறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் தொடரை நடத்தும் ஜெர்மனி அணியை வீழ்த்திய ஸ்பெயின் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இதைத்தொடர்ந்து இரண்டாவது காலிறுதி ஆட்டம் போர்ச்சுகல் - பிரான்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் முழு ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் கூடுதல் நேரத்திலும் இரண்டு அணிகளும் கோல்கள் அடிக்க தவறின.

பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி

இதன் பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்கும் விதமாக பெனால்டி ஷூட் அவுட் நடைபெற்றது. இதில் 5-3 என்ற கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது. இதன் மூலம் யூரோ சாம்பியன்ஷிப்பில் ஆறாவது முறையாக அரையிறுதி விளையாடும் அணி என்ற பெருமை பெற்றது. 2021 யூரோ சாம்பியன்ஷிப் நாக்அவுட் தோல்வி, 2022 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்விக்கு பின்னர் கைலியன் எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் அணி பெரிய தொடரில் முக்கிய வெற்றியை பெற்றுள்ளது.

யூரோ சாம்பியன்ஷிப்பில் 8 முறை அரையிறுதி வரை முன்னேறிய ஜெர்மனி அணி, அதிக முறை அரையிறுதி விளையாடிய அணியாக இருந்து வருகிறது.

முன்னதாக, போர்ச்சுகல் அணியின் மூன்றாவது பெனால்டி ஷூட் அவுட் முயற்சியில் ஜோவோ பெலிக்ஸ் கோல் அடிக்க தவறினார். அத்துடன் பிரான்ஸ் தனது 5 வாய்ப்பையும் கோல் ஆக்கியதால், போர்ச்சுகல் நான்கு கோல் முயற்சியில் தோல்வியை தழுவியது.

கடைசி யூரோ கோப்பையில் வெளியேற்றம்

39 வயதாகும் போர்ச்சுகல் ஸ்டார் வீரர், கேப்டனான கிறிஸ்டியாானோ ரெனால்டோவுக்கு இது கடைசி யூரோ சாம்பியன்ஷிப்பாக இருக்ககூடும் என கருதப்படும் நிலையில், தோல்வியுடன் வெளியேறியுள்ளார்.

2016 யூரோ கோப்பை பிரான்ஸை வீழ்த்தி வென்ற போர்ச்சுகல் அணியி்ல இடம்பிடித்திருந்த ரெனால்டோ, எதிர்வரும் 2026 பிபா உலகக் கோப்பை விளையாடுவார் என கூறப்படுகிறது.

பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தாத எம்பாப்பே

பெனால்டி ஷூட்அவுட்டில் ஒரு முறை கூட வாய்ப்பு எடுக்கவில்லை பிரான்ஸ் கேப்டனும், நட்சத்திர வீரருமான எம்பாப்பே. கூடுதல் நேரத்தின் முதல் பாதியில் அவரது உடைந்த மூக்கில், பந்து இரண்டு முறை பட்ட நிலையில், உடனடியாக வெளியேறினார். அவருக்கு பதிலாக மாற்று வீரராக சேர்க்கப்பட்டார், ஏற்கனவே இந்த தொடரின் லீக் போட்டியின்போது காயமடைந்த எம்பாப்பே மூக்கு பாதுகாப்பு முகமூடியால் மூடப்பட்டிருந்தது.

எஞ்சிய காலிறுதி போட்டிகள்

இன்று நடைபெற இருக்கும் மூன்றாவது காலிறுதி போட்டியில் இங்கிலாந்து - சுவிட்சர்லாந்து அணிகள் மோத இருக்கின்றன. இதன் பின்னர் நடைபெற இருக்கும் கடைசி காலிறுதி போட்டியில் நெதர்லாந்து - துருக்கி ஆகிய அணிகள் பலப்பரிட்சை செய்ய இருக்கின்றன.  

அதேபோல் முதல் அரையிறுதி போட்டி ஸ்பெயின் - பிரான்ஸ் அணிகளுக்கு இடையே வரும் புதன்கிழமை நடைபெற இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி