தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hbd Steve Smith: ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்டில் ஸ்மித் பதிவு செய்த ஸ்கோர்!

HBD Steve Smith: ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்டில் ஸ்மித் பதிவு செய்த ஸ்கோர்!

Manigandan K T HT Tamil

Jun 02, 2023, 05:30 AM IST

google News
Steve Smith: சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் தான் அறிமுகமானார் ஸ்மித்.
Steve Smith: சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் தான் அறிமுகமானார் ஸ்மித்.

Steve Smith: சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் தான் அறிமுகமானார் ஸ்மித்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், அதிரடி வீரருமான ஸ்டீவ் ஸ்மித்துக்கு இன்று (ஜூன் 2) பிறந்த நாள். 34வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். 1989ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் பிறந்தார்.

வலது கை ஆட்டக்காரரான இவர், ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 182வது பிளேயராக அறிமுகமானார்.

அவர் எதிர்கொண்ட முதல் அணி வெஸ்ட் இண்டீஸ். டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் அதே ஆண்டு ஜூலையில் அறிமுகமானார் ஸ்மித்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் தான் அறிமுகமானார் ஸ்மித்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் விளையாடும் ஸ்டைலை வைத்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிரிக்கெட்டின் லெஜண்ட் என வர்ணிக்கப்படும் டான் பிராட்மேனுடன் ஒப்பிடப்படுகிறார்.

இதுவரை ஆஸி., அணிக்காக ஸ்மித், 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8792 ரன்களை விளாசியிருக்கிறார். டெஸ்ட் போட்டியில் விளையாடி ஸ்கோர் செய்வதே சாதனை ஆகும். அதுவே ஒரு கிரிக்கெட் வீரரின் திறமையையும் வெளிப்படுத்தும்.

அந்த வகையில் ஸ்மித்தின் அதிகபட்ச டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோர் ஒரு ஆட்டத்தில் 239. மொத்தம் 16312 பந்துகளை அவர் எதிர்கொண்டிருக்கிறார். 30 சதங்களையும், 37 அரை சதங்களையும் ஆஸி., அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விளாசியிருக்கிறார். இதுவரை டெஸ்டில் 50 சிக்ஸர்களையும், 961 ஃபோர்ஸையும் விளாசியிருக்கிறார் ஸ்மித்.

ஒரு நாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் ஸ்மித், 142 ஆட்டங்களில் விளையாடிய 4,939 ரன்களை குவித்திருக்கிறார். மொத்தம் 12 சதங்களும், 29 அரை சதங்களும் இதில் அடங்கும்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 63 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் அவர், 1,008 ரன்களை விளாசியிருக்கிறார். இதுவரை 4 அரை சதங்களை விளாசியிருக்கும் ஸ்மித், ஒரு சதம் கூட அடித்ததில்லை.

ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக வழிநடத்திய ஸ்மித், 2015இல் 50 ஓவர் உலகக் கோப்பையும், 2021இல் 20 ஓவர் உலகக் கோப்பையும் வென்று கொடுத்திருக்கிறார்.

தொடக்கத்தில் லெக் ஸ்பின்னராகவே இருந்தார். அதனால் தான் ஆஸி., அணியிலும் இடம்பிடித்தார். ஆனால், அதன் பிறகு பேட்ஸ்மேனாக பரிணமித்தார்.

சர் கார்ஃபீல்டு சோபர்ஸ் டிராபி, ஐசிசி டெஸ்ட் பிளேயர் ஆஃப் தி இயர், ஐசிசி ஆடவர் டெஸ்ட் பிளேயர் ஆஃப் தி டிகேட், ஆலன் பார்டர் மெடல், ஆஸ்திரேலியன் டெஸ்ட் பிளேயர் ஆஃப் தி இயர், கிரிக்கெட்டர்ஸ் ஆஃப் தி இயர் உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.

டெஸ்ட் பேட்டிங் ரேட்டிங்கில் 947 வரை சென்றார் ஸ்மித். டான் பிராட்மேன் 961 ரேட்டிங்கை வைத்திருந்தார்.

2018ம் ஆண்டு மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3வது டெஸ்ட் ஆட்டத்தில், பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கி பின்னர் தனது தவறை ஒப்புக் கொண்டார்.

அதற்காக இவருக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.

இதனால், பல விமர்சனங்களுக்கு ஆளானார் ஸ்மித். எனினும், தடைக் காலம் முடிந்த பிறகு தற்போது அணியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார்.

ஐபிஎல், பிக் பாஷ் லீக் ஆகிய கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடியிருக்கிறார் ஸ்மித்.

டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணிக்கு அதிக ஸ்கோரை அடித்த வீரர்களில் 4வது இடத்தில் இருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித்.

வேர்ல்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இடம்பிடித்துள்ளார். ஜூன் 7ம் தேதி நடக்கும் பைனலில் இந்தியாவை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா.

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி