தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hbd Dipa Karmakar: இந்திய ஜிம்னாஸ்டிக் பெண் புறா..! 52 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு பதக்கம் வென்ற முதல் பெண்மணி

HBD Dipa Karmakar: இந்திய ஜிம்னாஸ்டிக் பெண் புறா..! 52 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு பதக்கம் வென்ற முதல் பெண்மணி

Aug 09, 2024, 07:37 AM IST

google News
இந்திய ஜிம்னாஸ்டிக்கில், பெண் புறா போல் பறந்த சாகசங்களை புரிந்த சர்வதேச பதக்கங்களை அள்ளியவர் தீபா கர்மாகர். 52 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு ஜிம்னாஸ்டிக்கில் பதக்கம் வென்றவராகவும், ஜிம்னாஸ்டிக்கில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவராகவும் உள்ளார்.
இந்திய ஜிம்னாஸ்டிக்கில், பெண் புறா போல் பறந்த சாகசங்களை புரிந்த சர்வதேச பதக்கங்களை அள்ளியவர் தீபா கர்மாகர். 52 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு ஜிம்னாஸ்டிக்கில் பதக்கம் வென்றவராகவும், ஜிம்னாஸ்டிக்கில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவராகவும் உள்ளார்.

இந்திய ஜிம்னாஸ்டிக்கில், பெண் புறா போல் பறந்த சாகசங்களை புரிந்த சர்வதேச பதக்கங்களை அள்ளியவர் தீபா கர்மாகர். 52 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு ஜிம்னாஸ்டிக்கில் பதக்கம் வென்றவராகவும், ஜிம்னாஸ்டிக்கில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவராகவும் உள்ளார்.

இந்தியாவுக்காக காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனையாக இருப்பவர் தீபா கர்மாகர். 2016இல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டி வரை சென்ற இவர், 0.15 புள்ளிகளில் நான்காவது இடத்தை பிடித்து பதக்கத்தை தவறவிட்டார். மொத்தமாக அவர் 15.066 புள்ளிகளை பெற்றார்.

2016 ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற தீபா கர்மாகர், 1964 ஆண்டுக்கு பிறகு 52 ஆண்டுகள் கழித்து இந்தியாவின் சார்பில் ஜிம்னாஸ்டிக்கில் இடம்பிடித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

திரிபுரா மண்ணின் நாயகி

திரிபுரா மாநிலம் அகர்டலாவை சேர்ந்த கர்மாகர், தனது 6 வயதில் இருந்தே ஜிம்னாஸ்டிக் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். தட்டையான பாதங்களை கொண்டிருந்த இவர், ஜிம்னாஸ்டிக் விளையாடுபவர்களுக்கான உகந்த உடலாக இல்லாமல் இருந்துள்ளது. தனது முழுமையான செயல்திறனை வெளிப்படுத்தி, விரிவான பயிற்சியால் காலில் வளைவை உருவாக்கி ஜிம்னாஸ்டிக்குக்கு ஏற்றவாறு உடல் வாகை மாற்றிக்கொண்டார்.

2008இல் முதல் முறையாக ஜூனியர் நேஷனல்ஸ் விருதை வென்ற இவர், அதற்கு முன்னர் மாநில, தேசிய மற்றும் சர்வதேச சாம்பியன்ஷிப்பில் 67 தங்கம் உள்பட 77 பதங்களை வென்றுள்ளார்.

சர்வதேச பதக்கம்

2010இல் இந்தியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்திய ஜிம்னாஸ்டிக் அணியில் இடம்பிடித்த தீபா கர்மாகர், 2014 காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்காக வெண்கலம் வென்றார். இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமை பெற்றார்.

இதைத்தொடர்ந்து 2015இல் ஹிரோஷிமாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார். 2015 அக்டோபரில் நடந்த உலக ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப்பில் இறுதி கட்டத்துக்கு தகுதி பெற்ற முதல் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஆனார் கர்மாகர்.

துருக்கியிலுள்ள மெர்சினில் 2018இல் நடந்த FIG ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சேலஞ் கோப்பை வால்ட் போட்டியில் கர்மாகர் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலகளாவிய நிகழ்வில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜிம்னாஸ்ட் என்ற பெருமையைும் பெற்றார்.

2018 ஆசிய விளையாட்டு போட்டி வால்ட் இறுதிப் போட்டிக்கு, வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கர்மாகர் தகுதி பெறத் தவறினார். பெண்கள் தகுதிப் போட்டியில் பங்கேற்பதற்கு முன்னர பயிற்சியின்போது லேண்டிங் செய்த நேரத்தில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்திய அரசாங்கத்தால் கெளரவம்

விளையாட்டு வீரர்களுக்கு இந்திய அராசாங்கத்தால் அளிக்கப்படும் அர்ஜுனா விருது, மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ விருது போன்றவற்றால் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் ஃபோர்ப்ஸ் லிஸ்டில், 30 வயதுக்கு உட்பட்ட ஆசியாவைச் சேர்ந்த சூப்பர் சாதனையாளர்கள் லிஸ்டில் 2017ஆம் ஆண்டில் இடம்பிடித்தார்.

ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் புரொடுனோ எனப்படும் கடினமான சுற்றில் வெற்றிகரமாக தரையிறங்கிய ஐந்து வீராங்கனைகளில் ஒருவராகவும், இந்தியாவுக்காக 2 தங்கம், 3 வெண்கலம் என சர்வதேச பதக்கங்களை வென்ற இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையுமான தீபா கர்மாகருக்கு இன்று பிறந்தநாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

அடுத்த செய்தி